காடு வெட்டி குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காடு வெட்டி குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வன்னியர் சமுதாயத்தினர் பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் அன்புமணி முதல் அமைச்சராக வருவார்: வன்னியர் சங்க தலைவர் குரு

புதுவை:

             புதுவை மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. 

கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியது:

             புதுவை மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளரலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆளவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை. வன்னியர் சமுதாய மக்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி வன்னியர்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது.

               இதனால் நாம் அடிமைப்பட்டோம். அதன்பின்பு டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்த போதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத்தந்தார். எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல் அமைச்சராகி உள்ளனர். 


             ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல் அமைச்சர் ஆகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார். வடதமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால் யார் தயவும் இன்றி நாம் ஆட்சியை பிடிக்க முடியும். புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழவைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.

                தமிழகம்  புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வன்னிய சமுதாயத்துக்காக டாக்டர் ராமதாஸ் வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராக வருவார் என்றார்.

அதிமுக பிரமுகரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு: ஜெ.குரு உள்ளிட்ட4 பேர் விடுதலை

  அரியலூர் :

         அதிமுக பிரமுகரை மிரட்டியதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீது தொடரப்பட்ட வழக்கு பொய்யானது எனக் கூறி அரியலூர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்துள்ளது.
 
             கடந்த 2008ஆம் ஆண்டு அதிமுக பிரமுகர் குணசேகர் என்பவரை மிரட்டியதாக கூறி, ஜெ.குரு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குரு மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என குணசேகர் தெரிவித்தார். அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.  அப்போது ஜெ.குரு உள்ளிட்டோர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிருபிக்கப்படவில்லை என கூறி, வழக்கை ரத்து செய்தததோடு, 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சிவக்குமார் ஆணையிட்டார்.

சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக நிர்வாகிகள் நியமனம்


சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக செயலராக சா.சந்தானகுமார், பரங்கிப்பேட்டை (தெற்கு) ஒன்றியச் செயலராக சௌ.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாநில பாமக தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே.குரு, பாமக துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் கடலூர் (தெற்கு) மாவட்டச் செயலர் வழக்கறிஞர் வேணு. புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுகவுடன் நல்லுறவு- கருணாநிதியை மீண்டும் முதல்வராக்குவோம்: கூறுகிறார் காடுவெட்டி குரு

ஜெயங்கொண்டம்:

                   திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையிலான உறவு இப்போது நன்றாக உள்ளது. கருணாநிதி யை அழைத்து மாநாடு நடத்தி, அவரிடம், நீங்கள்தான் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வீர்கள் என்று கூறப் போகிறோம் எனக் கூறியுள்ளார் வன்னியர் சங்கத் தலைவரான காடு வெட்டி குரு. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே இடையில் உறவு கசந்து போனது.

                மத்திய அமைச்சர் ராஜா குறித்தும், முதல்வர் கருணாநிதி குறித்தும் மிகக் கடுமையாக பேசியதாகக் கூறி காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு. இதைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக. அதன் பின்னர் வந்த மக்களவைத் தேர்தலில் காடுவெட்டி குருவின் மிகக் கடுமையான வற்புறுத்தலின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்று அதே காடுவெட்டி குரு, கருணாநிதியை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என முழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டத்தில்  அவர் பேசுகையில்,

               எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை வேலைகளை திட்டமிட்டு தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 120 தொகுதிகளை தேர்வு செய்து பென்னாகரத்தில் திட்டமிட்டு வேலைகள் செய்ததுபோல் உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகள் அமைத்தல், கொடியேற்றுதல் என்று வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

                ஒவ்வொரு தொகுதிகளிலும் 60 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம்.வரும் ஜுலை 18ம் தேதி பூம்புகாரில் 10 லட்சம் பெண்களை திரட்டி மகளிர் திருவிழா நடத்தும் பணியும், ஜுலை 28ம் தேதி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான பணிகளையும் செய்து வருகிறோம்.

                   தமிழக முதல்வர் கருணாநிதியை டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே.மணி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் சந்தித்து வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்த உள்ளோம். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு சாலை மறியல்கள் நடந்தபோது 120 சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடாக முதல்வர் கருணாநிதி, 'இந்த கனியை தருகிறேன் சுவைத்து பாருங்கள்' என்று இடஒதுக்கீடு வழங்கினார்.

                வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதியை மீண்டும் சந்தித்து 2 கோடி வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். முதல்வர் கருணாநிதியை சந்திப்பது வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கோரி மட்டுமே. இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். கூட்டணி என்பது சட்டமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் தலைமை செயற்குழுவை கூட்டி முடிவு செய்வார்கள்.

                       ராஜ்யசபா சீட் குறித்து டாக்டர் ராமதாசும், அன்புமணி ஆகியோரும் மற்றும் கட்சி செயற் குழுவும் முடிவு செய்யவர். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கருணாநிதி அறிவித்தால் முன்பு மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் கூறியதுபோல் மீண்டும் விழுப்புரத்தில் ஒரு மாநாட்டை கூட்டி இந்த முதல்வர் நாற்காலியில் நீங்கள்தான் (கருணாநிதி) முதல்வராக அமர்வீர்கள் என்று அறிவிப்போம். தற்போது திமுக-பாமக உறவு நன்றாக உள்ளது என்றார் காடுவெட்டி குரு.

                 எந்த காடுவெட்டி குருவால் திமுகவின் அன்பை இழந்ததோ அதே காடு வெட்டி குருவின் வாயாலேயே திமுகவுடன் நல்லுறவு இருக்கிறது, மீண்டும் கருணாநிதியே முதல்வர் என்று சொல்ல வைத்துள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக- பாமக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு






பெயர்: செ. குரு

பிறந்த தேதி -

நிரந்தர முகவரி:

             அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி

பிறந்த ஊர்:

               காடுவெட்டி

குடும்பம் மனைவி:

             சொர்ணலதா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குருவின் தந்தை ஜெயராமன், தாய் கல்யாணி.

கல்வி:

             பி. யூ. சி

வேலை:

           வன்னியர் சங்க தலைவர்


           அரசியல் அனுபவம் 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒன்றிய செயலாளர்.

                 சமுக சேவை வன்னியர் கல்வி அறக்கட்டளை செயலாளராகவும் இருந்து வருகிறார்.


                  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைய தலைமுறை தலைவர்களில் நம்பிக்கை நட்சத்திரமான குரு, அக்கட்சியின் சார்பில் இம்முறை திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாற்பத்தேழு வயதாகும் குரு மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார்.

             அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குரு காட்சிக்கு எளியவர். வெள்ளந்தியான சுபாவம் கொண்டவர். தொண்டர்களோடும், மக்களோடும் நெருங்கிப் பழகக் கூடியவர். அரசியலில் முதுகலைப்பட்டம் படித்தவர். அளவான குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வாழும் குரு கட்சி அறிவித்தப் போராட்டங்களில் போர் மனப்பான்மையோடு கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். கட்சியினர் இவரை ‘மாவீரன்’ என்று பெருமிதமாக குறிப்பிடுகிறார்கள். தமிழுணர்வு மிக்கவர்.

                 வீராணம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் அப்பகுதியில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் என்ற சூழலில் அப்பிரச்சினைக்காக களமிறங்கி, போராடி சிறைக்குச் சென்றார். கட்சித் தொடர்பான போராட்டங்கள் மற்றும் மறியல்களில் குருவின் ‘கை’ இல்லாமல் இருந்ததே இல்லை. சமீபத்தில் இவர்மீது அரசியல் காரணங்களால் தேசியபாதுகாப்புச் சட்டம் பாய்ந்து ஐந்து மாதம் சிறையில் வாடியபோது அகில இந்திய அளவிலும் குருவின் பெயர் பிரபலமடைந்தது. தீவிரமான போராளி என்பதால் பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸின் செல்லப்பிள்ளை.

                     2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு வென்றபோது இவர் சிறந்த நிர்வாகியும் கூட என்பது நிரூபணமானது. தொகுதியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டிட வசதி செய்து தந்தது, நூற்றுக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்தது, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி அமைத்து தந்தது, கிராம செம்மண் சாலைகளை தார்சாலையாக மாற்றியது, உட்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றியது என்று ஆண்டிமடத் தொகுதியில் குருவின் சாதனைகள் ஏராளம்.

                 அவ்வப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்து வைத்ததால் தொகுதி மக்களிடையே ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார். அரசு உதவித் தொகையினை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதற்கு எப்போதுமே முன்னுரிமை தருவார்.