வன்னியர் சங்க தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னியர் சங்க தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திண்டிவனத்தில் வன்னியர் சங்க தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சி: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கிறார்

செஞ்சி:
 
          வன்னியர் சங்க தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கிறார்.

பா.ம.க., மாநில பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது :
 
           வன்னிர் சங்க போராட்டத்தின் போது உயிர் நீத்த தீயாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி செப். 17ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை 9 மணிக்கு திண்டிவனம் வன்னிர் சங்க அலுவலகத்தில் தியாகிகள் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சித்தனி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், சிறுதொண்டைமான் ஆகிய இடங்களில் உள்ள நினைவு தூண்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

              இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மாநில தலைவர் கோ.க.மணி, வன்னி
ர் சங்க மாநில தலைவர் குரு கலந்து கொள்கின்றனர். இதில் கட்சி நிர்வாகிகள், வன்னிர் சங்க நிர்வாகிகள் திர ளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சட்டப்பேரவை பேரவைத் தலைவர் டி. ஜெயகுமாருக்கு பாமக குழுத் தலைவர் ஜெ.குரு வாழ்த்து

  
          14-வது சட்டப் பேரவையின் புதிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த டி.ஜெயகுமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தாற்காலிக பேரவைத் தலைவராக இருந்த செ.கு. தமிழரசன் வெளியிட்டார். இதேபோன்று, பேரவையின் துணைத் தலைவராக ப. தனபாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு பேரவையில் உள்ள கட்சித் தலைவர்கள் பாராட்டுரை வழங்கினர். அவை முன்னவர் பன்னீர்செல்வம் முதலில் பாராட்டிப் பேசினார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஏ.சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவர் ஆறுமுகம், பாமக குழுத் தலைவர் குரு, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

           அவர்களைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா இருவரையும் பாராட்டிப் பேசினார். இந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்ட இருவரும் ஏற்புரை நிகழ்த்தினர். முதலில் பேரவை துணைத் தலைவர் தனபாலும், அடுத்ததாக பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாரும் ஏற்புரை ஆற்றினர்.

நிதானம் தவறிவிட்டார் விஜயகாந்த்: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு

           நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

               நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார்.

              மரங்களையெல்லாம் வெட்டி விட்டு இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் மரங்களை நடச் சொல்லுகிறார்கள் என்று விபரம் தெரியாமல் விஜயகாந்த் பேசியிருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய பின் தங்கிய சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதார சூழ்நிலையிலும் தொடர்ந்து பின்தங்கி கிடந்த நிலையில், 1987ஆம் ஆண்டு இச்சமுதாயம் மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தியது.

                 சமூக நீதிக்காக நடைபெற்ற இப்புனித போராட்டம் நடந்த காலத்திலே, தன்னுடைய பிழைப்பிற்காக கோடம்பாக்கம் தெருக்களிலே சுற்றி திரிந்த ஒரு நபர் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவது இந்த புனிதப் போராட்டத்தில் பங்கு கொண்ட இலட்சக்கணக்கான மிகபின்தங்கிய மக்களையும், தன் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளின் தியாகத்தையும் இழிவுப்படுத்துவதாக உள்ளது.

                 அதிமுக ஆட்சியில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரின் ஆட்சியில்தான் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் விளைவாக இவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்விகள் இப்போது ஓரளவு கிடைத்து வருகிறது. இதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறாமை உணர்வுடன் நடிகர் விஜயகாந்த் இந்த மக்கள் மீது, மரத்தை வெட்டியவர்கள் என்று பழிசுமத்தி பேசுகிறார்.

                    அவர் சார்ந்த திரைப்படத் துறையினராலேயே தள்ளாட்டம் போடுகின்ற தண்ணீர் மனிதன் என்று விமர்சிக்கப்படுகின்ற ஒரு நபர் வெகு மக்களின் போராட்டத்தை, இழிவுப்படுத்தி பேசுவதை தமிழ் சமுதாயம் இனியும் மன்னிக்காது. விலைமதிப்பற்ற 21 மனித உயிர்களை பலி கொடுத்த நேரத்திலே நடந்த சில சம்பவங்களை பெரிதுபடுத்தும் நிதானம் இல்லாத அந்த நபர் என்றாவது மக்களின் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா? ஆண்டுடாண்டு காலமாக உழவுத் தொழிலை நம் குலத் தொழிலாக கொண்டு அனைவருக்கும் உணவு அளிக்கும் இம்மக்கள் மரங்களை நடுவதும், பசுமை தாயகம் அமைப்பதும் புதுமையான செய்தியல்ல. இவ்வாறு ஜெ.குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பங்கேற்ப்பு

சிதம்பரம் :

             "என் மீது வழக்குபோட்டு உள்ளே தள்ளிய தி.மு.க., வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என முதலில் நான் தான் கூறினேன்'' என வன்னியர் சங்க தலைவர் குரு பேசினார்.

சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியது: 

              என் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளியதையும் மறந்து, தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தால் தான் நமக்கு சுய மரியாதை கிடைக்கும் என பா.ம.க., தலைவர் ராமதாசிடம் கூறினேன். சண்டை என்றாலும், சமாதானம் என்றாலும் கருணாநிதியால் மட்டுமே முடியும். என் மீது வருத்தமில்லையே என நான் கருணாநியிடம் கேட்க, அதை ஞாபகம் வைத்திருக்கிறாயா என கேட்டார். 

               சிதம்பரத்தில் ஸ்ரீதர் வாண்டையாருக்கும், எங்களுக்கும் ஏராளமான வம்பு வழக்குகள் நடந்தது. நானே முன்னின்று அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறேன். இதனால் தலைவர்கள் பாதிக்கப் போவதில்லை. இருதரப்பு மக்கள் தான். நேரடியாக சண்டையிட்ட நாங்கள், தற்போது பக்குவப்பட்டு சமாதானத்திற்கு வந்து விட்டோம்.இவ்வாறு குரு பேசினார்.

தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் ராமதாஸ்: காடுவெட்டி குரு பேச்சு



தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் ராமதாஸ்:
 
 காடுவெட்டி குரு பேச்சு



விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மேல்காரணை கிராமத்தில் வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நடந்தது. 


கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது:
 

               இந்த கூட்டம் பூம்பூகாரில் நடைபெறுகின்ற மகளிர் மாநாட்டை ஒட்டியும், தனி இடஒதுக்கீடு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகாஅலுவலகம் முன்பு நடைபெறவுள்ள மறியலுக்கான ஆலோசனை கூட்டம். இன்னும் மாநாடு நடைபெற 60 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியாக இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

                இடஒதுக்கீடு போராட்டம் நடைபெற்ற போது நமது சொந்தங்கள் 21 பேர் சுட்டுக் கொன்றது காவல்துறை. அதற்கு உறுதுணை யாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நாம் இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய போது எந்த அரசியல் கட்சியும் நமக்கு ஆதரவு அளிக்கவில்லை.

                 இன்றைக்கு வரை நமக்கு சமூக நீதி கிடைக்கவில்லை. இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது 1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி நம் இனத்தை சேர்த்து 107 சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தார். அந்த இடஒதுக்கீடு கொடுத்து விட்டு முதல்வர் கருணாநிதி நான் உங்களுக்கு ஒரு கனி அளித்துள்ளேன். அதனை சுவைத்து பார்த்து கூறுங்கள் என்று நமது தலைவர் ராமதாசிடம் கூறினார். ஆனால் அது கனி அல்ல. அழுகிய பழம் என்று ராமதாஸ் கூறினார்.  இவ்வாறு அவர் பேசினார்.

                 முன்னதாக வன்னியர் சங்க மாநில தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைச்செயலாளர் தனராசு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மேல் காரணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

             எம்.எல்.ஏ.க்கள் கலிவரதன், செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், பா.ம.க. மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் ரவி அலெக்ஸ், மாவட்ட அமைப்பாளர் அரிகரன், தேர்தல் பணிக்குழு அம்மன் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் கன்னிகா ராமு, மாவட்ட ஊராட்சி மன்றக்குழு தலைவி வசுந்தராதேவி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்தி பேசி னார்கள். முன்னதாக மேல்காரணை ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் வரவேற்று பேசினார்.


இலவச கல்வி திட்டத்தை வலியுறுத்தி வருபவர் ராமதாஸ்


திருவண்ணாமலை:
            இலவச கல்வி, கட்டாயக்கல்வி, சமச்சீர் கல்வி திட்டத்தை வலியுறுத்தி வருபவர் ராமதாஸ் என வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு கூறினார். 
 போளூர் வட்டம், கேளூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:  
             வடதமிழகத்தில் 40 சதவீதம் குடிசை வீடுகள் உள்ளன. அதில் வன்னியர்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தமிழகத்தில் 2 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும்.   கட்டாயக்கல்வி, சமச்சீர் கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து இலவச கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்று கூறி வருபவர் ராமதாஸ்.   காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைக்கும் கட்சியாக பாமக விளங்குகிறது.   அன்புமணி ராமதாஸ், அரங்க வேலு போன்ற சிறப்பு மிக்க தலைவர்கள் பாமகவில் உள்ளனர் என்றார் அவர்.   பாமக மாநில துணைத்தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் எம்எல்ஏ எதிரொலிமணியன், வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலர் இரா.காளிதாஸ், பாமக மாவட்ட தலைவர்கள் ஆ.வேலாயுதம், கி.ஏழுமலை, மாவட்ட செயலர் லா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு






பெயர்: செ. குரு

பிறந்த தேதி -

நிரந்தர முகவரி:

             அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி

பிறந்த ஊர்:

               காடுவெட்டி

குடும்பம் மனைவி:

             சொர்ணலதா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குருவின் தந்தை ஜெயராமன், தாய் கல்யாணி.

கல்வி:

             பி. யூ. சி

வேலை:

           வன்னியர் சங்க தலைவர்


           அரசியல் அனுபவம் 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒன்றிய செயலாளர்.

                 சமுக சேவை வன்னியர் கல்வி அறக்கட்டளை செயலாளராகவும் இருந்து வருகிறார்.


                  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைய தலைமுறை தலைவர்களில் நம்பிக்கை நட்சத்திரமான குரு, அக்கட்சியின் சார்பில் இம்முறை திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாற்பத்தேழு வயதாகும் குரு மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார்.

             அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குரு காட்சிக்கு எளியவர். வெள்ளந்தியான சுபாவம் கொண்டவர். தொண்டர்களோடும், மக்களோடும் நெருங்கிப் பழகக் கூடியவர். அரசியலில் முதுகலைப்பட்டம் படித்தவர். அளவான குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வாழும் குரு கட்சி அறிவித்தப் போராட்டங்களில் போர் மனப்பான்மையோடு கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். கட்சியினர் இவரை ‘மாவீரன்’ என்று பெருமிதமாக குறிப்பிடுகிறார்கள். தமிழுணர்வு மிக்கவர்.

                 வீராணம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் அப்பகுதியில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் என்ற சூழலில் அப்பிரச்சினைக்காக களமிறங்கி, போராடி சிறைக்குச் சென்றார். கட்சித் தொடர்பான போராட்டங்கள் மற்றும் மறியல்களில் குருவின் ‘கை’ இல்லாமல் இருந்ததே இல்லை. சமீபத்தில் இவர்மீது அரசியல் காரணங்களால் தேசியபாதுகாப்புச் சட்டம் பாய்ந்து ஐந்து மாதம் சிறையில் வாடியபோது அகில இந்திய அளவிலும் குருவின் பெயர் பிரபலமடைந்தது. தீவிரமான போராளி என்பதால் பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸின் செல்லப்பிள்ளை.

                     2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு வென்றபோது இவர் சிறந்த நிர்வாகியும் கூட என்பது நிரூபணமானது. தொகுதியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டிட வசதி செய்து தந்தது, நூற்றுக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்தது, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி அமைத்து தந்தது, கிராம செம்மண் சாலைகளை தார்சாலையாக மாற்றியது, உட்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றியது என்று ஆண்டிமடத் தொகுதியில் குருவின் சாதனைகள் ஏராளம்.

                 அவ்வப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்து வைத்ததால் தொகுதி மக்களிடையே ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார். அரசு உதவித் தொகையினை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதற்கு எப்போதுமே முன்னுரிமை தருவார்.