செஞ்சி:
வன்னியர் சங்க தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கிறார்.
பா.ம.க., மாநில பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது :
வன்னியர் சங்க போராட்டத்தின் போது உயிர் நீத்த தீயாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி செப். 17ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை 9 மணிக்கு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் தியாகிகள் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சித்தனி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், சிறுதொண்டைமான் ஆகிய இடங்களில் உள்ள நினைவு தூண்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மாநில தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் குரு கலந்து கொள்கின்றனர். இதில் கட்சி நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் திர ளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக