புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்க பா.ம.க. வலியுறுத்தல்

புதுச்சேரி:

பா.ம.க. செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவரை சந்தித்து புதுவை திட்டப்பணிகளுக்கு 2750 கோடி ரூபாயை பெற்று வந்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு மாநில முதல்- அமைச்சர் மத்திய திட்டக்குழுவிடம் தனது மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கூறி நிதியை பெறுவது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை.

          இந்த அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் மாநிலங்கள் மத்திய திட்டக்குழுவிடம் நிதியை பெற்று வருகின்றன. ஆனால் புதுவையில் ஒருசிலர் மத்திய அரசே தனது கைப்பையில் உள்ளது போல தங்களை அணுகினால் அதிக நிதி பெற்று தருவேன் என்று கூறி வந்ததற்கு மாறாக முதல்- அமைச்சர் ரஙங்கசாமி யாருடைய உதவியும் இல்லாமல் முறையாக சரியான திட்டங்களுடன் டெல்லி சென்று கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதல் நிதி பெற்று அவர்களுடைய முகத்திரையை மீண்டும் கிழித்துள்ளார்.

              தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆரம்பிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கழித்தும் புதுவையில் 68 சதவிகிதத்திற்கு மேல் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுடைய நலன்களுக்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒன்று உருவாக்கப்படாமல் இருப்பது மிக வெட்கக்கேடான செய்தியாகும்.

             எனவே காமராஜருடைய அடிச்சுவற்றை பின்பற்றும் தங்களுடைய ஆட்சிக்காலத்திலேயே, சட்டமன்ற கூட்டத்தொடரிலேயயே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை உருவாக்கி அதற்காக தனி செயலகம், தனி செயலாளர், இயக்குனர் ஆகியோரை அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் ஆண்டு விழா

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/ff8f411d-ba0f-4e92-9183-44148e2a0a12_S_secvpf.gif

 
புதுச்சேரி:
 
          புதுவை பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் ஆண்டு விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பசுமை தாயகம் மற்றும் பா.ம.க. சார்பில் எல்லைப்பிள்ளை சாவடியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று பிறந்த 25 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

            இதைத்தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில்களில் ஊர்வலமாக புறப்பட்டு வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தனர். அங்கு சுற்று சூழலை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 
 
              இந்த நிகழ்ச்சிகளுக்கு பா.ம.க. மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். பா.ம.க. ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் பொன்.செல்வராஜ், ஜெயபாலன், ரவி, வி.பி.பி.வேலு, வடிவேலு, வெங்கடேசன், பெருமாள், முகமது யூனூஸ், கிருஷ்ணமூர்த்தி, தேவராஜ், சாந்தா, அசோக், ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

புதுச்சேரியில் பசுமைத் தாயகம் சார்பில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

புதுச்சேரி

           புதுச்சேரியில் பாமகவினர் சார்பில்  நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா பசுமைத் தாயகம் நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

            இதையொட்டி பாமக செயலர் ஆர்.அனந்தராமன் தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஜூலை 25-ல் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் பைக்கில் ஊர்வலகமாக மங்களம் தொகுதியில் உள்ள விவேகானந்தர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கே.அருள்முருகன், கட்சியின் ஆலோசகர் கா.கோ.ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 22ம் ஆண்டு துவக்க விழா: மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார்

புதுச்சேரி : 

           பாட்டாளி மக்கள் கட்சியின் 22ம் ஆண்டு துவக்க விழா ப்ளிஸ் இன் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். கட்சி ஆலோசகர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுப்ரமணியன், மதியழகன் முன்னிலை வகித்தனர். 

விழாவில், செயலாளர் அனந்தராமன் பேசியது:

       இந்த கூட்டத்துக்கு பல தொகுதிகளின் நிர்வாகிகள் வராதது வேதனை அளிக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால்தான் கட்சி என்பது கிடையாது. எந்த நேரத்திலும் மக்கள் பணியாற்ற வேண்டும். துடிப்புடன் பணியாற்றும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

           கடந்த கால ஆட்சியாளர்கள் மீது இருந்த வெறுப்பு தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாகும். பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதால் மக்கள் ஆதங்கத்தில் ஓட்டளித்தனர். இதனால், பா.ம.க., வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் ஓட்டுக்களை பா.ம.க., பெற்று தந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

             தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் வரும் 25ம் தேதியில் இருந்து விருப்ப மனு தரலாம். இவ்வாறு அனந்தராமன் பேசினார். விழாவில், துணை செயலாளர்கள் செல்வராஜ், ஜெயபால், ஞானசேகரன், முகமது யூசுப், தொண்டரணி அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இளைஞரணி: 

          பா.ம.க., இளைஞரணி சார்பில் முத்தியால்பேட்டையில் துவக்க விழா நடந்தது. இளைஞரணி தலைவர் அறிவழகன் வரவேற்றார். செயலாளர் அனந்தராமன், கொடியேற்றினார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பாமகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

             புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பாமகவுக்கு 2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

                புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், திமுக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

             இந்நிலையில் அக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. பாமகவுக்கு 2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாமக, 

1 .மணவெளி
2 .மண்ணாடிபட்டு 

ஆகிய தொகுதிகளிலும், 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 

நெடுஞ்காடு (தனி) 

               ஆகிய தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நெடுஞ்காடு (தனி) தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக அரசு வணங்காமுடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் வேண்டும்: தேர்தல் குழு தீர்மானம்

               சட்டமன்ற தேர்தலில் போட்டியிட புதுச்சேரி மாநிலத்தில் 7 தொகுதிகளில் கேட்டு பெற வேண்டும் என்று பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
             புதுச்சேரி மாநில பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு கூட்டம் 100 அடி ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் 7 தொகுதிகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெற வேண்டும்.
            புதுச்சேரி மாநிலத்தில் எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது என்றும், வேட்பாளர்கள் யார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய இரவும், பகலும் பாடுபட வேண்டும். தொகுதி அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வன்னியர் சமுதாயத்தினர் பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் அன்புமணி முதல் அமைச்சராக வருவார்: வன்னியர் சங்க தலைவர் குரு

புதுவை:

             புதுவை மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. 

கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியது:

             புதுவை மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளரலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆளவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை. வன்னியர் சமுதாய மக்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி வன்னியர்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது.

               இதனால் நாம் அடிமைப்பட்டோம். அதன்பின்பு டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்த போதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத்தந்தார். எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல் அமைச்சராகி உள்ளனர். 


             ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல் அமைச்சர் ஆகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார். வடதமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால் யார் தயவும் இன்றி நாம் ஆட்சியை பிடிக்க முடியும். புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழவைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.

                தமிழகம்  புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வன்னிய சமுதாயத்துக்காக டாக்டர் ராமதாஸ் வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராக வருவார் என்றார்.

ராமதாஸ் தலைமையில் இன்று புதுவை மாநில பாமக பொதுக்குழு கூட்டம்

தைலாபுரம் தோட்டம்:

          பா.ம.க.வின் புதுவை மாநில பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று நடக்கிறது.

             புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று  தைலாபுரத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் புதுவை மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து பா.ம.க.வின் புதுவை மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல்.ஏ.  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                 "புதுவை மாநில பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9-30மணியளவில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி தீர்மானம்



புதுச்சேரி:

            சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

              பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் புதுச்சேரியில் ஒரு பலமான வெற்றிக் கூட்டணியை உருவாக்கி குறைந்த பட்சம் 7 சட்டமன்ற தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்து பெற்றுதர வேண்டுமெனவும், கூட்டணி சம்மந்தமாக முடிவு செய்ய பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யாவுக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது எனவும் இந்த நிர்வாகக் குழு கூட்டம் முடிவு செய்கிறது.

               மருத்துவர் அய்யா அமைக்க இருக்கும் கூட்டணியில் பா.ம.க.வும், கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, அணி பொறுப்பாளர்களும், தொகுதி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் அயராது பாடுபடுவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

             இக்கூட்டத்தில் ஆலோசகர் ராமக்கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகரன், பொருளாளர் கோபி, மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் மதியழகன், வன்னியர் சங்க தலைவர் வேணுகோபால், ஞானசேகரன், கிருஷ்ணராஜ், செல்வராஜ், வேலு, வடிவேலு, யுணுஸ், தங்க.அறிவழகன், சுரேஷ், ரமேஷ், வெங்கடேசன், சந்தானம், பாண்டியராஜன், சங்கர், சீனுவாசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.