சட்டமன்ற தேர்தலில் போட்டியிட புதுச்சேரி மாநிலத்தில் 7 தொகுதிகளில் கேட்டு பெற வேண்டும் என்று பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மாநில பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு கூட்டம் 100 அடி ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் 7 தொகுதிகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெற வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது என்றும், வேட்பாளர்கள் யார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய இரவும், பகலும் பாடுபட வேண்டும். தொகுதி அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக