நன்னிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க.விற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி: பாமக நிர்வாகிகள்

          நன்னிலம் சட்டமன்றத்தொகுதியை பா.ம.க.விற்கு பெற்றுத்தர வேண்டுமென பா.ம.க. ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
            திருவாரூர் அருகே குடவாசலை அடுத்த சிமிழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்  தீர்மானங்கள் 

 
             திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி என 4 சட்டமன்றத்தொகுதிகள் உள்ளன. இதில் நன்னிலம் தொகுதி பா.ம.க.விற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக உள்ளது. அதனை பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெற்றுத்தர வேண்டும். 

             அடுத்த மாதம் (ஏப்ரல்) பள்ளி தேர்வு மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு வர உள்ளதால் சட்டமன்றத்தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரிக்கு தந்தி அனுப்ப வேண்டும். 

             தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: