பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 13ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 13.4.2011 அன்று நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களிலிருந்து வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெறும். பாமக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ள அனைவரும் இந்த நேர்காணலில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக