இலவச கணினி பயிற்சி மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவச கணினி பயிற்சி மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில் இலவச கணினி பயிற்சி மையம்: எம்.எல்.ஏ., ஜெ.குரு திறந்து வைத்தார்

வாழப்பாடி:

           வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம் கிராமத்தில், சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில், இலவச கணினி பயிற்சி மையம் திறப்பு விழா, வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிதிவழங்குதல் மற்றும் மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

          அந்த விழாவிற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் சக்திவேல் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சேலம் மாவட்டத்தின் சார்பில் நிதியை பெற்றுகொண்டு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.
 
அப்போது வன்னியர் சங்க தலைவர் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு  பேசுகையில், 
 
          “வன்னியர்களின் மேம்பாட்டிற்கு தனி இடஒதுக்கீடு மிக முக்கியமாகும். தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு வழிவகுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை, மத்திய அரசு துவக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகளவில் வாழ்ந்து வரும் வன்னியர் சமூக மக்கள் கவுண்டர், நாய்க்கர்,படையாச்சி, கண்டர், ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு பட்ட பெயர்களில் அழைக்கபடுகின்றனர். 
 
            மத்திய அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒட்டுமொத்த வன்னியரும் "வன்னியர் குல சத்திரியர்” என குறிப்பிட வேண்டும் என்றார். அந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சண்முகம், பா.ம.க., மாநில துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் ராஜா, தலைவர் ஜெயவேல் மற்றும் நிர்வாகிகள் நாராயணன், பழனிசாமி, ராமநாதன், முருகன்,வெங்கடாஜலம், சிவக்குமார், ராமச்சந்திரன், சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.