சேலம் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேலம் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேலம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 11 வார்டுகளுக்கான பா.ம.க.,வேட்பாளர் பட்டியல்

சேலம்: 

        சேலம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 11 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 

வார்டு எண் 8 சந்திரா, 
9- கலாசெல்வன், 
7- சித்ரா, 
6- மாரியம்மாள்,
2- முருகன், 
1- முருகன்,
10- ஜெயகுமார், 
11- சுப்புரு,
13- பழனியம்மாள், 
3- சின்னராஜ்,
5- ராஜா.


உள்ளாட்சி தேர்தலில் 15 ஆண்டுக்குப் பின் பா.ம.க, தனித்து போட்டி

 சேலம்: 

           தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின், உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்துப் போட்டியிட உள்ளது,'' என, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி   தெரிவித்தார். சேலம் மாவட்ட பா.ம.க., சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறுவதை, நேற்று அக்கட்சியின் தலைவர் மணி துவக்கி வைத்தார்.

அதன் பின் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: 

               உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், பா.ம.க.,வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள், 12ம் தேதி வரை வாங்கப்படும். இந்த தேர்தலில், பா.ம.க, வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 1996 தேர்தலில், பா.ம.க, தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. பா.ம.க,வுக்கு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. 

            அத்துடன், நிர்வாகிகளுக்கும் தேர்தல் அனுபவம் இருப்பதால், வெற்றியை தேடித் தருவர். உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இந்த முறை மூலம் மட்டுமே, நேர்மையான முடிவுகளை கொடுக்க முடியும். இவ்வாறு மணி கூறினார். 




சேலத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்:

           ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, 

             3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் 8 வாரத்துக்கு தடை செய்துள்ளது. இதன் பிறகு என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதை எதிர்த்து மீண்டும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். 

           இதற்கிடையே வரும் 14-ம் தேதி திருச்சியில் தமிழ் அமைப்புகளின் சார்பில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநாடு நடத்த உள்ளோம். இதில் ராமதாஸ்  கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.  போராட்டத்தில் மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு ஜாமீனில் விடுதலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/35125e49-b200-4297-9632-acb145f58924_S_secvpf.gif
 
சேலம்:

              ஓமலூர் அருகே உள்ள பொட்டிபுரத்தில் உள்ள நிலத்தின் ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஓமலூர் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு கடந்த 27-ந் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 29-ந் தேதி தமிழரசு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

            இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி தமிழரசு தரப்பில் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சாதிப்பெயரை சொல்லித்திட்டி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இந்நிலையில் நிலப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஓமலூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தமிழரசு, மாணிக்கம், ராஜம்மாள், கண்ணுபிள்ளை, கண்ணம்மாள், மற்றும் நிலத்தை வாங்கிய ரத்தினம் ஆகியோரிடம் நீதிபதி இளங்கோவன் விசாரணை நடத்தினார். மேலும் நிலப் பத்திரத்தில் பதிவாகியுள்ள கையெழுத்து மற்றும் கைரேகைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக கையெழுத்து நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

            இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு தரப்பில் ஓமலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ஈரோடு நீதிமன்றம் எண் 1-ல் தினமும் காலை 10-30 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  ஏற்கனவே மற்றொரு வழக்கிலும் இதே நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. மேலும் நிலப்பறிப்பு வழக்கில் கைதான ராஜம்மாள், கண்ணுபிள்ளை, கண்ணம்மாள், ரத்தினம் ஆகியோருக்கும் தினமும் மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மாணிக்கம் என்பவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட வில்லை.

            இதையடுத்து ஜாமீன் உத்தரவுடன் தமிழரசுவின் வக்கீல்கள் நேற்று மாலை சேலம் மத்திய சிறைக்கு சென்றனர். எனினும் ஜாமீன் ஆவணங்கள் ஒப்படைக்கும் நேரம் முடிந்து விட்டதால் தமிழரசு விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று ஜாமீன் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழரசு விடுதலையானார். அவரை பா.ம.க. வினர் வரவேற்று அழைத்து சென்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு மீது பொய் வழக்கு: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கண்டனம்

சேலத்தில்  பேசிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி,

          பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான தமிழரசு மீது நில மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு பொய் வழக்கு ஆகும். தமிழரசு எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் மீதான புகார் குறித்து விசாரிக்காமல் உடனடியாக வழக்கு போட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரியது.

          தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருவரின் நிலத்தை யார் அபகரித்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த நிலம் மீட்கப்பட வேண்டும் என்பதில் பா.ம.க.வுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் மோசடியாக ஒரு புகார் கொடுத்து அதன் மீது விசாரிக்காமல் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையது அல்ல என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு மீது பொய் வழக்கு: பா.ம.க.வினர் போராட்டம்

              சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு மீது, ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் ராஜம்மாள், கண்ணுப்பிள்ளை, கண்ணம்மாள், மாணிக்கம் என்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ, தமிழரசை மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள், இந்த நிலையில் பா.ம.க.வினர் சேலத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.

பாமக சேலம் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் திரு ஏ.கே.ஆறுமுகம் மீது பொய் வழக்கு: கதிர்.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம்

சேலம் :

             பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் திரு ஏ.கே.ஆறுமுகம் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைப்பெறுகிறது. மாநில துணைச்செயலாளர் திரு மு.கார்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் திரு இரா.அருள் மற்றும் சேலம் மாநகர மாவட்டசெயலாளர் கதிர்.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைப்பெறுகிறது. .

திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பா.ம.க.வினர் சிறப்பாக பணியாற்றுவார்கள்: டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை


 எங்கள் கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது: தி.மு.க. தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் கலைஞர்; 

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

 
 

சேலம்:

             சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

            தமிழகத்தில் 6-வது முறையாக முதல்-அமைச்சர் கலைஞர் மீண்டும் ஆளவேண்டும் என்று மக்களே அதைத்தான் விரும்புகின்றனர். எங்கும் இதைப்பற்றியே பேச ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு காரணம் தி.மு.க. தேர்தல் அறிக்கை தான். தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் முதல் அமைச்சர் கலைஞர் தான்.அவர் வெற்றி திருமகன், எல்லோரும் தேர்தல் அறிக்கை பற்றியே பேசுகிறார்கள். இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது நிறைவேற கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராக்கிட வேண்டும் என பேசிவருகிறார்கள். 234 தொகுதிகளிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

                  நமக்கு ஓட்டு சதவீதம் கூடிவருகிறது. வாக்குகளும் கூடுதலாகி வருகிறது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து தேர்தல் பணியாற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஒன்றாக கைகோர்த்து இருக்கிறது. இந்த இரண்டு கைகளையும் யாரும் பிரிக்க முடியாது. 20 ஆண்டு கனவு தற்போது நனவாகி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி வருவதால் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கிறது. சாலிடாக ஓட்டு விழுந்து விடும் என இருந்து விடக்கூடாது.

                வேட்பாளர்கள் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்க வேண்டும். இந்த வாக்காளரை 18 முறை பார்த்து விட்டேன், 20 முறை பார்த்து விட்டேன் எனக்கூறும் வகையில் வேட்பாளர்களும், கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் மனதை மாற்ற வேண்டும்.  பெரிய கட்சி, சிறிய கட்சி என பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அசட்டையாக இருந்து விடக்கூடாது. 
 
             நாம் நிற்கும் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் 100 மடங்காக தேர்தல் பணியாற்றி உழைக்க வேண்டும் என பா.ம.க. கட்சியினருக்கு கட்டளையிட்டும் இருக்கிறேன்.பா.ம.க.வினர் சிறப்பாக பணியாற்றுவார்கள். எனக்கு நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் பேசினார். இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 

பாமக நிறுவனர் ராமதாஸ் - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு

சேலம்:  

           சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
           சளி, இருமலால் அவதிப்பட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திங்கள்கிழமை சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோகுலம் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சில் சளி கட்டியிருப்பதால் கண்டிப்பாக மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
             இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் பாமக தலைவர் ஜி.கே. மணியும் உடன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

கொள்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நடிகர்கள்!-அன்புமணி

சேலம்:

                டிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது, எதற்கு கட்சி தொடங்குகிறோம் என்றும் தெரியாது, என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

            சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் ப நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசுகையில், 

               "தமிழகத்தை எந்த கொள்கையும் இல்லாத திரைத் துறையைச் சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். 43 வருடமாக சினிமாக்காரர்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆள சினிமாதான் தகுதியா... சினிமாவை வைத்துதான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

              இன்று வந்த நடிகர்கள் எல்லாம் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்கள். அந்த நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் இவர்கள்? மக்களுக்காக போராடினார்களா... சிறைக்கு சென்றார்களா.... ஒரு கிராமத்தையாவது எட்டி பார்த்திருப்பார்களா...?

                நடிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது. எதற்கு கட்சி தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஆனால் கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி பாமகதான். தமிழகத்தில் சீரான இலவச கல்வி வழங்க பாமக தொடர்ந்து பாடுபடும்," என்றார். சிறிது காலம் நடிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸும், அவர் மகன் அன்புமணியும் மீண்டும் தீவிரமாக நடிகர்களைத் தாக்கிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

               அதிமுகவுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி உறுதி என்று செய்திகள் வெளியாகும் நிலையில், பாமகவின் இந்த தாக்குதல் பேச்சு கவனிக்கத்தக்கது. பயிற்சி முகாமில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம். வரதட்சணை கொடுமையையும், குடிப் பழக்கத்தையும் அறவே ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்.

               பெண்ணை கட்டிக் கொடுக்கும்போது, பெண்ணுக்கு நகை போடுவீர்காள? வேறு என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது. இதுபோன்ற பண்பாடுகள் ஒழிய வேண்டும். இதுபோன்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்தில் குடி பழக்கத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், அதனை அரசே ஊக்குவித்து வருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார்.