இரா.அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா.அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேலம் மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/e6c046c6-8ea7-4864-960e-396bc791dfa1_S_secvpf.gif
 
சேலம்:

        சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சேலம் வந்து பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பேசியது:-

         எங்களது வேட்பாளர்கள் சொன்னதை செய்து தருவார்கள். உங்களுக்காக உழைக்க மேயர் வேட்பாளரான இரா.அருளுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டீர்கள். அவர்கள் ஏதும் செய்து தரவில்லை. அவர்கள் ஏதும் சாதிக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.  நாங்கள் சாதித்து காட்டுகிறோம். அவர்கள் வசனம் மட்டும் பேசி சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் சொன்னதை செய்து தந்து பாராட்டு பெறுவோம். சேலம் திருமணிமுத்தாற்றில் முன்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மக்கள் குளிப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? இதை நாங்கள் மாற்றி காட்டி பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.

             சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தருவோம்.சேலத்தை பசுமை நகராக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். கொசுவை முற்றிலும் ஒழிப்போம், இந்த ஒரு முறை பா.ம.க.விற்கு வாய்ப்பு தந்து ஓட்டு போடுங்கள். நாங்கள் நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். முதலமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டு இல்லாமல் செய்வோம் என்றார். இப்போது மின் விட்டு இல்லாமலா? உள்ளது. நாங்கள் இதை சரிசெய்வோம். திராவிட கட்சிகள்ஏதும் மக்களுக்கு செய்யவில்லை. எங்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து காட்டி சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

                இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.கார்த்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி.சதாசிவம், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பகுதி செயலாளர் அண்ணாமலை, பூபாலன், பெரியசாமி, பழஅன்பு, ராஜமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, கவுன்சிலர் அருள், எஸ்.பி. ஆறுமுகம், சாம், பழ அன்பு, ராஜமாணிக்கம், திரிசங்கு, பூபதி, மார்க்கெட் சண்முகம், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

சேலம்:

             சேலம்கோட்டை மைதானத்தில் சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளர் இரா.அருள் மற்றும் 60டிவிசன் கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேலம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாநில துணை பொது செயலாளருமான மு.கார்த்தி தலைமை வகித்தார். மாநகர் மாவட்டசெயலாளர் கதிர்ராசரத்தினம் வரவேற்றார்.

           பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சி.பெ.சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எம்.பி.சதாசிவம், வடக்குமாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, வடக்கு மாவட்ட தலைவர் சித்தேஸ்வரன் உள்பட பலர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர்களை டாக்டர் ராமதாஸ் அறிமுகம்செய்து வைத்து பேசினார்.

அப்போது  டாக்டர் ராமதாஸ்
கூறியது:-

              பாமக போல் கொள்கை உள்ள கட்சி ஏதும் இல்லை. நல்ல கொள்கை உள்ள கட்சி பாமக. சேலத்திற்கு ரெயில்வே கோட்டம் கொண்டு வந்தோம். இதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டது ரெயில்வே அமைச்சர்களாக இருந்த வேலு, மூர்த்தித்தான். புதிய புதிய வழித்தடங்கள் மூலம் ரெயில்கள் விடப்பட்டது. புதிய ரெயில்களும் விட்டோம். இதுபோல் சேலத்தில் அதிநவீன மருத்துவமனை கொண்டு வந்தவர் டாக்டர் அன்புமணிராமதாஸ்தான். ஆட்சிசெய்யாத நிலையில் இருந்த நாங்கள் இவ்வளவையும் செய்துகொடுத்தோம்.

             சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இரா.அருளை வெற்றி பெற செய்தால் அவர் மாநகர மக்களுக்கு நல்லாட்சி தருவார். அவர் ஒரு சிறு தவறு கூட செய்யாமல் மக்களுக்கு உதவி செய்வார். இதனால் நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள். மது இல்லாத தமிழகத்தை உருவாக்க பா.மக. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். இப்படி வேறு கட்சிகள் கூறமுடியுமா. மற்றவர்களால் இப்படி கூற முடியாது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் பட்ஜெட் போடுகிறோம்.

               
துபோல் வேறு கட்சிகள் போடுகிறதா. இல்லை. 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டு உள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். கச்சத்தீவு பிரச்சினை என்னானது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறது. பெரிய மழைபெய்தாலோ, அணைகளுக்கு ஆபத்து என்று வந்தாலோத்தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். பாலாறு பாழாய் போய்கிடக்கிறது.

              இவற்றை எல்லாம் பா.ம.க. மட்டும் தான் பேசிபோராடி வருகிறது. தமிழக மக்கள் வேறு ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்துங்கள். திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.அப்புறப்படுத்த வேண்டும். இந்த வேலைகளை பா.ம.க. செய்ய இருக்கிறது. தமிழகத்திற்கு மாற்றம் தேவை. மக்கள் நினைத்தால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

           கூட்டத்தில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜி.கே. மணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசு, கன்னையன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.சண்முகம் மற்றும் பலர் பேசினர். முடிவில் பழ.அன்பு நன்றி கூறினார்.

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க, வேட்பாளர் இரா.அருள் சொத்து மதிப்பு விபரம்

சேலம்: 

சொத்தின் மதிப்பு விபரம் 

            சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் இரா.அருள், அசையும் சொத்தின் மதிப்பு (கையிருப்பு தொகை, கார், வங்கி இருப்பு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் டெபாஸிட் செய்த தொகை), 27 லட்சத்து, 47 ஆயிரத்து, 838 ரூபாய். 

                மனைவி பெயரில், 23 லட்சத்து, 11 ஆயிரத்து, 577 ரூபாயும், அவரை சார்ந்தவர்கள் பெயரில், முதல் நபர் மீது, 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது நபர் மீது, ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 500 ரூபாயும் இருக்கிறது.

அருளின் அசையா சொத்து

                (விவசாய நிலம், தனியாக வாங்கப்பட்ட சொத்து, கட்டுமானம், நில முதலீடு, வணிக கட்டிடம்) மதிப்பு, ஒரு கோடியே, 63 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய். மனைவி பெயரில் உள்ள சொத்து மதிப்பு, 20 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய்.


 

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் இரா.அருள் வேட்பு மனு தாக்கல்

http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/d7077f69-5a91-46e4-b3e1-162bebb03c4c_S_secvpf.gif


சேலம்:

           சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கும், மற்றும் 60 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்குமான தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 29-ந் தேதி கடைசி நாளாகும். 

          இந்த தேர்தலில் பா.ம.க. கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அருளை சேலம் மேயர் வேட்பாளராக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதேபோல் மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

           இந்த நிலையில் பா.ம.க.வின் சேலம் மேயர் வேட்பாளர் இரா.அருள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் நேற்று காலை 10 மணி அளவில் சேலம் டவுனில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வந்து மாலை அணிவித்தார். மேலும் நேற்று "தமிழர் தந்தை'' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி திருவள்ளுவர் சிலை அருகிலேயே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் படத்தை வைத்து, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

           தொடர்ந்து அவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை, மாநகராட்சி தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கார் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மு.கார்த்தி, தமிழரசு, சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. செயலாளர் கதிர்ராசரத்தினம், வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.பி. சாம்ராஜ், பசுமை தாயகம் மாநில துணை அமைப்பாளர் சத்திரிய சேகர், மாநகராட்சி கவுன்சிலர் அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

             பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இரா.அருள் சேலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாநகராட்சி கமிஷனர் லட்சுமிப் பிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.   

பின்னர் பா.ம.க. கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அரு ள் கூறியது:-
             சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ஆகியோர் எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் சேலம் மாநகர மற்றும் மாவட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி உள்ளது.
             பா.ம.க. சார்பில் மத்திய சுகாதார துறை மந்திரியாக இருந்த டாக்டர் அன்புமணி சேலம் மாநகரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைய உறுதுணையாக இருந்து உத்தரவிட்டார். பா.ம.க.வின் சார்பில் மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்த வேலுவின் முயற்சியின் பலனாக சேலம் ரெயில்வே கோட்டம் உருவானது. எனவே இந்த மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் எனக்கு வாக்குகளைஅளித்து வெற்றி பெறச் செய்தால் குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்பட சேலம் மாநகரின் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதில் முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன்.
            மேலும் மாநகரை சுத்தமான, பசுமையான மற்றும் சுகாதாரமான நகராக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

பசுமை தாயம் சார்பில் சமச்சீர் கல்விL அடுத்தது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம்

 
http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/e3143948-c521-4782-84ba-c1b1442f5fd5_S_secvpf.gif
 
 http://www.dinamani.com/Images/article/2011/8/26/25ramadas.jpg
 
சென்னை:

               சமச்சீர் கல்விக்கு அடுத்து என்ன? என்ற தலைப்பில் பசுமைத் தாயகம் சார்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. சவுமியா அன்புணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

          கருத்தரங்கில் முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், வசந்திதேவி, கல்வியாளர் ராஜகோபால், ஜி.கே.மணி, வக்கீல் பானு ஆகியோர் பேசினார்கள்.  
 
கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது

              சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியாக பொதுப்பாடத்திட்டம் வந்துள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 33 சதவீத பள்ளிகளில் பொதுக்கழிப்பிட வசதியில்லை. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளும், 529 நடுநிலைப் பள்ளிகளும் அரைகுறை கட்டிடங்களில் இயங்குகிறது.  எனவே கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த வேண்டும். மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் கல்வித் துறைகளை கலைத்து விட்டு ஒரே கல்வித்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

              கருத்தரங்கில் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் செயலாளர் அருள், துணை செயலாளர் எஸ்.கே.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுமைத் தாயகம் அமைப்பினர் எதிர்ப்பு: மகேந்திர சிங் டோனி நடித்த மதுபான விளம்பர படங்கள் அகற்றம்

            இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நடித்த மதுபான விளம்பர படங்கள் அகற்றப்பட்டதற்கு பசுமைத் தாயகம் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.


             இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நடித்த மதுபான விளம்பரபடங்கள் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய டாக்டர் அன்புமணி ராமதாஸ், டோனிக்கு கடிதம் எழுதினார். இதைதொடர்ந்து டோனி மதுபான விளம்பரங்களில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

                கடந்த சிலநாட்களுக்கு முன்பு டோனி சென்னையில் பார்க் ஷெராட்டன் ஓட்டலில் தங்கியிருந்தபோது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மதுபான விளம்பரங்களில் நடிக்கக்கூடாது என்றும் சென்னையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர படங்களை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த டோனி நடித்த விளம்பர படங்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள் கூறியது:

                        முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்று சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த டோனி விளம்பர படங்கள் அகற்றப்பட்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் மதுபான நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மது பானங்களை சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் திணிக்கிறார்கள். இந்த தவறான செயலை அனைத்து ஐ.பி.எல். அணிகளும் கைவிடவேண்டும் என்றார்.


பாமக சேலம் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் திரு ஏ.கே.ஆறுமுகம் மீது பொய் வழக்கு: கதிர்.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம்

சேலம் :

             பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் திரு ஏ.கே.ஆறுமுகம் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைப்பெறுகிறது. மாநில துணைச்செயலாளர் திரு மு.கார்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் திரு இரா.அருள் மற்றும் சேலம் மாநகர மாவட்டசெயலாளர் கதிர்.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைப்பெறுகிறது. .