திருவள்ளூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமகவினர் திருவள்ளூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

              திருவள்ளூர் நகர தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், கேசவன், மோகன்குமார், வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். 

            இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்னையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில, அரசுகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஜே.குமார் நன்றி கூறினார்.



0 கருத்துகள்: