திருவள்ளூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவள்ளூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பதவி பா.ம.க.வேட்பாளர் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் : 

              உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருவள்ளூரில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள், தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

             திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் குமார் அ.தி.மு.க., சார்பில் பாஸ்கரன், தி.மு.க., சார்பில் ஆதாம், காங்கிரஸ் சார்பில் வடிவேல், பா.ஜ.க., சார்பில் பாலாஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சுரேஷ், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.

             27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, பா.ம.க., அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க.,  பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், மொத்தம் 110 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர, 39 சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.

            தேர்தல் நடைபெறுவதற்கு, இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளான, பா.ம.க.,தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சி வேட்பாளர்கள், திருவள்ளூர் நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், வீதி வீதியாகச் சென்று, ஓட்டுச் சேகரித்து வருகின்றனர்.

திருவள்ளூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:

            ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமகவினர் திருவள்ளூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

              திருவள்ளூர் நகர தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், கேசவன், மோகன்குமார், வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். 

            இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்னையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில, அரசுகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஜே.குமார் நன்றி கூறினார்.



திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

       

http://www.sivajitv.com/newsphotos/Ramadoss%20Reading%20book.jpg
      
         திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் (21.08.2011) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           மது, திரைப்பட மோகம் ஆகிய கலாச்சார சீரழிவுகளில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இலவச திட்டங்களை முற்றிலும் நிறுத்தி விட்டு, மேல்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.  பாமக தலைமையிலான அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாமக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

திருவள்ளூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்

திருவள்ளூர்:
 

           சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் 163 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

           மேற்கு மாவட்டச் செயலாளர் வெங்கேடசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பாலயோகி கண்டன உரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பாலசிங்கம் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பாமகவினர் பங்கேற்றனர். நகரச் செயலர் கண்ணன் நன்றி கூறினார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதி பா.ம.க. பயிற்சி முகாம்: ராமதாஸ் கலந்து கொள்கிறார்

           திருவள்ளூர் சட்டசபை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கு பயிற்சி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மணவாளநகரில் உள்ள கே.இ.ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. 



           இந்த பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார். இதில் முன்னாள் அமைச்சர் வேலு, கோ.க.மணி எம்.எல்.ஏ., மாநில துணை பொது செயலாளர் சிவ.கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலா என்ற பாலயோகி செய்து வருகிறார்.