திருச்செங்கோடு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் கலாவதி, குமாரபாளையம் நகரச் செயலாளர் பொன்னுசாமி, பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, மல்லசமுத்திரம் கணேஷ் உள்பட பலர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக