கடலூர்:
சமூக முன்னேற்றச் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டப் பொதுக்குழு, வன்னியர் கல்வி விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதல் 3 இடங்கள் பெறும், வன்னியர் சமூக மாணவ, மாணவிகள் சுமார் 1,000 பேருக்கு ஆங்கிலம்- தமிழ் அகராதிகள் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் வகிக்கும் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி ரேவதிக்கு பரிசும் வழங்கப்பட்டது. அகராதி, பரிசுகளை சமூக முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் கோ.கோபால் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பழனிவேல் வரவேற்றார். திரைப்பட இயக்குநர் கௌதமன், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், விஜயராவ், மாநில துணைத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக