பஞ்சமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஞ்சமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்: மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன் சிறப்புரை

நெல்லிக்குப்பம் : 

            நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் வெள்ளக்கரையில் நடந்தது. தணிகாசலம் தலைமை தாங்கினார். சிவகாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், சண்முகம், அமிர்தலிங்கம், பஞ்சமூர்த்தி சிறப்புரை ஆற்றினர். நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குக் கடுமையாக உழைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் நடந்தது. 

             கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சண்முகம், நகரச் செயலர் ஆனந்த், மாவட்ட மாணவரணிச் செயலர் அருள் பாபு, ஒன்றியச் செயலர்கள் செல்வம், தட்சிணாமூர்த்தி, நகராட்சி உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி

            திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் மாநில தேர்தல் பணிக் குழு செயலர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

கடலூர்:

           பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் கடலூரில் மனிதச்சங்கிலி போராட்டம்  திங்கள்கிழமை நடந்தது. 

             சாலை விபத்துக்களில் உலகில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். 2009-ம் ஆண்டில் இந்தியாவில் 1,26,896 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்.  மக்கள் தொகை அடிப்படையில் 1,000 இந்தியர்களில் தமிழர்கள் 57 பேர். ஆனால் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் இந்தியர்கள் 1,000 பேரில் தமிழ்நாட்டினர் 108 பேர். 

              இதனால், தமிழகத்தில் சாலை விபத்துக்களைத் தடுக்க ஒருங்கிணைந்த தெளிவான கொள்கையும் சட்டமும், விதிமுறைகளும் தேவை. விதிமுறைகள் முழுமையாக கண்டிப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பசுமைத் தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.  குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க வேண்டும். தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களிóல் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில்  கடலூரில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடந்தது. 

              திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு, கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். பசுமைத் தாயகம் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் செல்வராஜ், வேணு புவனேசுவரன், தர்மலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் திருமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் சாலையோரம் கைகோர்த்து நின்று, மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.