வேணு.புவனேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேணு.புவனேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

கிள்ளை:

            பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் தில்லைவிடங்கனில் நடந்தது. 

               ஒன்றிய செயலர் ராஜா தலைமை தாங்கினார். நகர செயலர் ரமேஷ் வரவேற்றார். ஒன்றிய தலைவர் தமிழரசன், கிள்ளை நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் இளங்கோவன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வேணுபுவனேஸ்வரன், தலைவர் அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர் அகிலாண்ட பிச்சாண்டி உட்பட பலர் பேசினர். ஒன்றிய துணைச் செயலர் சசிகுமார், அமைப்புச் செயலர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி அமைப்பதில்லை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க.ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்:

            காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க., ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நாச்சியார்பேட்டையில் நடந்தது.

            ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வரதராஜன் வரவேற்றார். மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் ராமமூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய துணை தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேணு.புவனேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல் சிறப்புரையாற்றினர்.

பொதுக்குழு கூட்ட த்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

             உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் அனைத்து பதவிகளுக்கும் தனித்து போட்டியிடுதல், 

              ஸ்ரீமுஷ்ணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோருதல்,

             ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்துவந்த இன்டேன் கேஸ் வினியோகத்தை ஜெயங்கொண்டம் பகுதிக்கு மாற்றிதை கண்டித்தல், 

            புதிய கேஸ் வினியோக மையத்ததை ஸ்ரீமுஷ்ணத்தில் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      ஒன்றிய துணை செயலாளர் விஜயரங்கன், ஒன்றிய துணை தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரவி நன்றி கூறினார்.

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பா.ம.க.செயற்குழுக் கூட்டம்: கடலூர் மாவட்ட செயலர் வேணு.புவனேஸ்வரன் சிறப்புரை

காட்டுமன்னார்கோவில் : 

             உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளின் உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது என காட்டுமன்னார்கோவிலில் நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

              காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க., செயற்குழுக் கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகர செயலர் மோகன் வரவேற்றார். ஒன்றிய செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் வேணு புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வரதராசன், ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளோடு ஒட்டு உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது, கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் பா.ம.க தனித்துப் போட்டி

சிதம்பரம்:

             வரும் உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவது என நகர பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

             சிதம்பரம் நகர பாமக பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் முத்து.குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சு.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், ம.அன்பழகன், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், அண்ணாமலை நகர் செயலாளர் ச.திருநாவுக்கரசு, மாயவேல், எஸ்.ஆர்.நாகவேல், ப.குருசேவ், அருள்கோவிந்தன், சந்திரமோகன், கோவி.தில்லைநாயகம், ரா.வெங்கடேசன், ரா.குமார், ரா.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தீர்மானங்கள்: 

சிதம்பரம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பாமக கொடியேற்றுவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 

உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடுவது என அறிவித்த நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிதம்பரத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்


சிதம்பரம்:

              கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை  தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

          மாவட்டச் செயலர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் முத்து.குமார் வரவேற்றார். பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் சௌ.ராஜா முன்னிலை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கி.தேவதாஸ்படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரா.சிலம்புச்செல்வி, முன்னாள் மாவட்டச் செயலர் உ.கண்ணன், பால்ஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார். தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 122 பேரை நகர போலீசார்  கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


கடலூர் (தெற்கு) மாவட்ட பாமக தேர்தல் பணிக் குழு தலைவர் நியமனம்

சிதம்பரம்:

          பாமக கடலூர் (தெற்கு) மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவராக சிதம்பரம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ப.மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலின் பேரில் மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.