இ.ரா.பிரகாஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இ.ரா.பிரகாஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் இ.ரா.பிரகாஷை ஆதரித்து வல்லத்தில்அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


நலத்திட்டங்கள் தொடர  

கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும்; 

முன்னாள் மத்திய மந்திரி அன்பு மணி பிரசாரம் 



மயிலம் :

      மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வல்லத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பேசினார். 
அப்போது  அன்புமணி கூறியது:-



             கலைஞர், சோனியா காந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஆகியோரது கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி சமூக நீதிக்காக ஏற்பட்ட கூட்டணி. இங்கே போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் இதே தொகுதியை சேர்ந்த கீழ்மாம்பட்டை சேர்ந்தவர். பிரகாஷ் வெற்றி பெற மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்.


              கலைஞர் திட்டங்களான ஒரு ரூபாய்க்கு அரிசி, 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடரவேண்டுமானால் கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல் அமைச்சராக வேண்டும். எனவே இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


             கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே.மூர்த்தி, மற்றும் கண்ணன் எம்எல்ஏ, விவசாய மைய மாநில தலைவர் சடகோபன், மாவட்ட செயலர் மணிமாறன், ஓன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, வேல்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசுந்தரா தேவி, சேட்டு, வக்கீல் ராஜேந்திரன், இளம் வழுதி, மாவட்ட இளைஞர் அணி சிட்டிபாபு, கன்னியப்பன், மாரி, தனஞ்செழியன், ஸ்ரீதர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரிப்பு

 
வல்லம் பகுதியில் பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பு




செஞ்சி:
         வல்லம் பகுதியில் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரித்தார். மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர், வல்லம் ஒன்றிய கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.


             நாட்டார் மங்கலம், மேல்சித்தாமூர், வல்லம், கொங்காப்பட்டு, தென்புத்தூர், தளவாளப் பட்டு, நாகந்தூர், மரூர் மேல்சேவூர், ஈச்சூர், கல்லேரி, செங்கமேடு, மணியம்பட்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மேளதாளத்துடனும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர். 
          ஓட்டுவேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலர் அண்ணாதுரை, நிர்வாகிகள் இளம்வழுதி, ராஜகோபால், துரை, பா.ம.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தராதேவி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீதர், சுப்பிரமணி, நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் மனோகரன், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க.வேட்பாளர் பிரகாஷ் தீவிர வாக்குசேகரிப்பு



செஞ்சி:

           மயிலம் தொகுதி பா.ம.க.வேட்பாளர் பிரகாஷ் வல்லம் ஒன்றியத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக கண்ணன் எம்.எல்.ஏ. போந்தை, வீரணாமூர், வேம்பாக்கம், கடுகப்பட்டு, நிர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம் எடமலை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

              முன்னதாக வேட்பாளர் பிரகாஷ் கடம்பூர், களையூர், வடபுத்தூர், கொரவனந்தல், நெகனூர், அரியூர், விற்பட்டு, அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் இளம்வழுதி, துரை திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் துரை, பெருமாள், பா.ம.க.மாவட்ட செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் சேட்டு என்ற ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



மயிலம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் பிரகாஷ் கூட்டணி கட்சியினர் சார்பில் வரவேற்பு

திண்டிவனம்:

              மயிலம் சட்டமன்றத்  தொகுதி பாமக வேட்பாளர் பிரகாஷுக்கு கூட்டேரிப்பட்டு கூட்டுரோடு சந்திப்பில் புதன்கிழமை மாலை கூட்டணி கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

                 தொகுதி மறு சீரப்பில் திண்டிவனம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலம் பொதுத் தொகுதியாக உருவாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக நாகராஜ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமகவுக்கு மயிலம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

            செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டை சேர்ந்த இ.ரா.பிரகாஷ் என்பவர் மயிலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்க வந்த மயிலம் பாமக வேட்பாளர் பிரகாஷுக்கு திமுக காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

                 வரவேற்பின் போது பாமக சார்பில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வசந்திராதேவி, ஒன்றியக் கவுன்சிலர் நெடிசுப்பிரணி, மாநில செயற்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், திமுக சார்பில் மாவட்ட பிரதிநிதி ஜோதி, முன்னாள் ஒன்றியச் செயலர் பெருமாள், காங்கிரஸ் ள்கட்சி சார்பில் மயிலம் வட்டாரத் தலைவர் லட்சுமணன், டிஎஸ்சி குழு உறுப்பினர் இல.கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட துணைச் செயலர் பாரதிதாசன், மயிலம் ஒன்றியச் செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  அதனை தொடர்ந்து மயிலம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார் வேட்பாளர் பிரகாஷ்.