சென்னை:
கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் மீது தாக்குதல் நடந்தது. இதில் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வின் புகாரின் அடிப்படையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பரசுராமன், பிரிதீபன் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் இருந்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்பட சிலர் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் பதிவு செய்த குற்றப்பத்திரிகையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. மேலும் புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.
இதையடுத்து, திண்டிவனம் கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், “கோட்டக்குப்பம் பகுதியில்தான் டாக்டர் ராமதாசும் அவரது குடும்பத்தினரும் வசிக்கிறார்கள். எனவே கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. இந்த வழக்கை விசாரிக்க கூடாது. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜோதி மணி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யவும் நீதி பதி உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக