திண்டிவனம்:
திண்டிவனத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஞாயிற்றுக்கிழமை கிழிக்கப்பட்டதால் போலீஸôர் வழக்கு பதிந்துள்ளனர். வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு திண்டிவனம் வன்னியர் சங்கத்தின் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இது குறித்து பாமக நகர செயலர் மலர்சேகர் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக