வறட்சி நிதிக்கு அறிக்கை துணை முதல்வர் தகவல்

Latest indian and world political news information

             வறட்சி குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்' என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபை பூஜ்ய நேரத்தில் பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பேசும் போது, 

                  ''தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. இப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. இவற்றை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஒவ்வொர குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் வறட்சி நிதி வழங்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு துணை முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தபோது, '

                     'மாவட்ட வாரியாக வறட்சி குறித்த அறிக்கையை கலெக்டர்கள் வாயிலாக பெற்று வருகிறோம்; அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்,'' என்றார்.

0 கருத்துகள்: