விழுப்புரம்:
வன்னியர்களுக்கு தனியாக 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்னியர் சங்கம் சார்பிலும் பாமக சார்பிலும் நடைபெற்றன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், புதன்கிழமை வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலர் பா. செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பாமக மாவட்டச் செயலர் இராம. ரவிஅலெக்ஸ், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி. அன்புமணி, மாநில துணைத் தலைவர் தங்க. சோதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் வ.சு. வசுந்தராதேவி உள்ளிட்டோர் பேசினர். நகரச் செயலர் கோ. தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
வானூர்:
வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், வன்னியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலர் பத்மனாபன் வரவேற்றார். ஒன்றிய வடக்குச் செயலர் பிரகாஷ், கண்டமங்கலம் ஒன்றியச் செயலர்கள் சுகுமார், இளங்கோவன், கோட்டகுப்பம் நகரச் செயலர் கதிரேசன், பாமக மாவட்டத் தலைவர் சந்துரு, வானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மக்களவை உறுப்பினர் மா. தனராசு சிறப்புரையைற்றினார். முன்னாள் ஒன்றியச் செயலர்கள் ராமலிங்கம், ஆறுமுகம், ஞானசேகரன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செஞ்சி:
செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்மலையனூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் மணிமாறன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசுந்தராதேவி, நகரத் தலைவர் முனுசாமி, சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் இருபான், பி.டி.எம். அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணித் தலைவர் சடகோபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட வன்னியர் சங்க செயலர் என்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாமக ஒன்றியப் பொறுப்பாளர்கள் தவஞானம், நேரு, மாயவன், ஜெயக்குமார், பாண்டியன், ரவிச்சந்திரன், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாமக மாநில துணை பொதுச் செயலர் அன்பழகன், மாவட்ட தலைவர் வ.ச.சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் துரை.சுப்பிரமணியன், தமிழ்வாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகரச் செயலர் ஞ.ராஜேஷ் நன்றி கூறினார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரில் பாமக சார்பில், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் தங்க.குப்பன் தலைமை வகித்தார். திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் முகையூர் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன், மாநில இளைஞரணி துணைச் செயலர் அ.பா.செழியன், ஒன்றியச் செயலர்கள் ஞானவேல், இளங்கோவன், ஏழுமலை, ராமகிருஷ்ணன், ஆறுமுகம், சுப்பிரமணி, தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலர் கே.பி.பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் எஸ்.கோவிந்தன், க.முத்துவேல், கோ.சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ஆர்.வடிவேல் வரவேற்றார். மாநில மகளிரணிச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காசாம்பு பூமாலை, வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலர் எஸ்.டி.ராமு, ஒன்றியச் செயலர் வ.ச.சம்பத், வன்னியர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலர் எஸ்.எம்.மணிவண்ணன், வன்னியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் பி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக