சோழிங்கர்:
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் பாமகவுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன என்று கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி கூறினார்.
பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் அன்புமணி ராமதாஸ் அவர்,
உலகின் பல்வேறு நாடுகளிலும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறிய கிராமத்தில் பிறந்தார். வேளாண் தொழில் செய்து கிடைத்த வருமானத்தில் படித்தார். டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட உறவினர்கள் உதவியுடன்தான் படிக்க முடிந்தது . படித்து முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனது சமுதாயத்துக்காக பாடுபடப் போகிறேன் என்று கூறிவிட்டார்.
இந்தியா விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. யார் யாரோ ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் யாரும் நம்மை வாழ விடவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.
சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று கவலைப்படாதீர்கள். தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் நமக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன. பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் ராமதாஸ்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக