இலங்கையில் தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

 சென்னை :

                ஆளுநர் உரை மக்களைக் கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி உரை; சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் இதில் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

 ஆளுநர் உரை பற்றி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்து: 

               குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக உள்ள ஆளுநரின் பதவி மதிக்கப்பட வேண்டும். அவர் உரையாற்ற முற்படும்போது, அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அமைதியாக எழுந்து, எதிர்ப்பு அறிக்கையை படித்துவிட்டு வெளிநடப்பு செய்வது இதுவரை நடந்து வந்தது. இப்போது கூச்சல் குழப்பமிட்டு, தர்னா போராட்டம் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயலாகும்.  

            ஆளுநர் உரையில் பெரிய அளவில் பரபரப்பு ஏதும் இல்லை. வழக்கமான அறிவிப்புகள் கொஞ்சம் கூடுதலாக உள்ளன.  குடிசைகள் இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகள் இல்லாத நகரங்கள் உருவாக்கி அனைவருக்கும் பாதுகாப்பான வீடு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. இவை கனவாக முடிந்துவிடாமல் நனவாக வேண்டும்.  இலங்கையில் தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ஆரம்ப கட்ட முயற்சிகூட இதுவரை எடுக்காமல் இருப்பது; 

                    முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பது; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது ஆகியவை பற்றி உரையில் மேலெழுந்த வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க