கரூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சி தேர்தல்: கரூரில் அனைத்து கட்சி கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாஸ்கரன் பங்கேற்பு

கரூர்:
             ரூரில் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷோபனா தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி கிறிஸ்துராஜ், திட்ட அதிகாரி முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரேமாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியது:-

              உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கான வாக்குச்சாவடி மையங்களின் பெயர் பட்டியல் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது. அதன் படி கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் கரூர் ஒன்றியத்திற்கு 110 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

          அதே போன்று தாந்தோணி ஒன்றிய பகுதிக்கு 113 வாக்குச்சாவடி மையங்கள், அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு 113 மையங்கள், க.பரமத்திக்கு 155 மையங்கள், குளித்தலை ஒன்றியத்திற்கு 85 மையங்கள், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு 137, கடவூர் ஒன்றியத்திற்கு 120, தோகைமலைக்கு 194 மையங்கள் என மொத்தம் 937 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.  

                இதே போன்று கரூர் நகராட்சியில் 159 மையங்கள், குளித்தலை நகராட்சிக்கு 26 மையங்கள் என மொத்தம் 185 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி பகுதியை பொறுத்த வரை உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு 15 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று புலியூர் 16, புஞ்சை புகளூர் 22, புஞ்சை தோட்டக்குறிச்சி 15, டி.என்.பி.எல். 12, பள்ளப்பட்டி 25, அரவக்குறிச்சி 16, கிருஷணராயபுரம் 15, பழைய ஜெயங்கொண்டம் 15, நங்கவரம் 18, மருதூர் 15 என மொத்தம் 184 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 158 கிராம பஞ்சாயத்துகளில், சணப்பிரட்டி பஞ்சாயத்து தற்போது கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது. எனவே தற்போது மாவட்டத்தில் 157 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது. வாக்காளர் பெயர் இறுதி பட்டியல் நாளை (12-ந்தேதி) வெளியிடப்படுகிறது. தேர்தலை பொறுத்த வரை நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறுகிறது. பஞ்சாயத்துக்களில் வாக்குசீட்டு பதிவு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

             கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாஸ்கரன், ராக்கிமுருகேசன், தமிழ் மணி, ராஜா, கணேசன், 
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், வக்கீல் பிரிவு கனராஜ், விஜயகுமார், தி.மு.க.சார்பில் மாவட்ட துணை செயலாளர் பிரபு, பொருளாளர் ராமசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் செயலாளர் சின்னையன், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெகதீஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன்குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேலுசாமி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மருதைவீரன், பாரதீய ஜனதா கட்சி சார்பில் சிவா, கணேசன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.