ஜனநாயக முற்போக்கு கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயக முற்போக்கு கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விழுப்புரம் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்

விழுப்புரம் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேச்சு



விழுப்புரம்

             விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில்  ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசியது:-

                எனது அருமை நண்பர் திருமாவளவன் இங்கு பேசும்போது, எதிர்க்கட்சி தலைவரை பார்த்து உங்களுக்கு அதுதெரியுமா, இது தெரியுமா என்றெல்லாம் கேட்டார். சரித்திரம் தெரியுமா என்று கேட்டார். திராவிட இயக்கத்தின் மூலம் தெரியுமா, திராவிட இயக்கத்தை யார், யார் வளர்த்தார்கள் என்று தெரியுமா, இதற்கெல்லாம் ஒரே பதில் திராவிட இயக்கம் என்றால் என்ன என்பதை யாரை பார்த்து கேட்டாரோ அவரிடம் இருந்து பதில் வந்திருந்தால் நான் ஆச்சரியப்பட தேவையில்லை.

              திராவிட இயக்கத்தை அழிக்க இன்றைக்கு கொடுவாள் எடுத்து புறப்பட்டிருக்கிறார் ஒரு அம்மையார். திராவிட இயக்கத்தை அழித்தே தீருவேன், பெரியார் உருவாக்கிய சுயமரியாதையை, அண்ணா உருவாக்கிய லட்சிய தாகத்தை அந்த கொடுமைகளை எல்லாம் அறவே புரட்டிப்போட்டு இந்த இயக்கத்தை அழிப்பது தான் எனது வேலை என்று புறப்பட்டிருக்கிறார். அந்த அம்மையார் உங்களிடத்தில் ஆதரவு கேட்பது எதற்கு, ஆட்சி செய்வதற்காக அல்ல.

             இந்த ராஜ்ஜியத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவருடைய மூல நோக்கம் திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான். நானும், காதர்மொய்தீனும் மதத்தால் வேறுபட்டவர்கள். நானும், திருமாவளவனும் பகுப்பால் வேறு பட்டவர்கள். நானும், டாக்டர் ராமதாசும் சமுதாயத்தால் வேறுபட்டவர்கள். இப்படி வேறுபாடுகளையெல்லாம் ஒருமைப்பாடாக ஆக்கிய பெருமை யாருக்கு? தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு.

              அந்த இயக்கத்தின் சார்பிலே இந்த ஊரிலே பகுத்தறிவு பிரசாரம் நடத்தியபோது 100 பேர் 200 பேரை பார்த்த இந்த இடத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பேரை பார்த்தபோது நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோமா இல்லையா, சுயமரியாதையுடன் இருக்கிறோமா இல்லையா, அந்த வெற்றிக்கு அடையாளம்தான் இங்கே வீற்றிருக்கின்ற உங்கள் கரவொளி, வாழ்த்து முழக்கம். நாங்கள் வரும்போது எங்களை கண்குளிர பார்த்து வாழ்த்திய முழக்கம்.

              எனவே இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நேரத்தில் உங்களை கேட்டுக்கொள்வது இப்போது காரியம் பெரிது, வீரியம் பெரிதல்ல. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டிய காரியம். மணி 10 ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மிக கெடுபிடியாக இருக்கிறது. நான் முதல்- அமைச்சராக இருந்தாலும் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவன். தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை நான் பதவியில் இருக்கும்போது கேட்க விரும்பவில்லை.

பதவியை நீங்கள் விலக்கி வைத்தால் அவைகளையெல்லாம் கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில் நான் கேட்பேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். 
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

                 நேரத்தின் அருமை கருதி உங்களிடத்தில் 3 செய்தியை மட்டும் நான் சொல்கிறேன். 1996-ல் இதே இடத்தில் பா.ம.க. ஒரு மிகப்பெரிய மாநாட்டை போட்டு நமது கலைஞரை அழைத்து அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று ஒரு தனி நாற்காலி போட்டோம். 7 கட்சி கூட்டணியோடு இருந்து அப்போது 96-ல் முதல்வராக வந்தார். இது ஒரு செய்தி. அடுத்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்போம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறேன்.

                 மே 13-ந் தேதி வாக்கு எண்ணும்போது முதல் முறையாக கவர்னரிடம் தி.மு.க. தலைவர் கலைஞரை ஆட்சி அமைக்க அனுப்புகிற முதல் கடிதம் இந்த ராமதாசிடம் இருந்து தான் செல்லும். அமைச்சர் போட்டியிடுகிற இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எனக்கு மட்டும் ஒரு நாள் நேரம் இருந்தால் நான் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சுற்றி சுற்றி வந்திருப்பேன்.

             இந்த தொகுதியில் எதிர்த்து நிற்கிற வேட்பாளர் டெபாசிட் வாங்கக்கூடாது. இன்னொரு செய்தி ரிஷிவந்தியம் தொகுதியில் சிவராஜை எதிர்த்து நிற்கிற அந்த வேட்பாளரும் டெபாசிட் வாங்கக்கூடாது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

சென்னை:

           சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

                ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஒரு முற்போக்கு கூட்டணி. ஆனால் எதிரணியில் இருக்கிற கூட்டணி ஒரு பிற்போக்கு கூட்டணி. 2001-2006ல் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது, கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக உறுதிமொழி தந்தார். கேஸ் சிலிண்டர் கொடுப்பதாக வாக்குறுதி தந்தார். ஆனால் அவற்றில் எதையும் அவர் செய்யவில்லை.

              2006-2011 கலைஞரின் ஆட்சியிலே அவர் செய்த சாதனைகளை பட்டியலிட நேரமில்லை. பொதுவாக மத்தியில் இருக்கும் அரசோடு மாநில அரசுக்கு ஒரு நல்லிணக்கம் தேவை. நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று, அந்த கூட்டணியிலே இருந்து கொண்டு ஜெயலலிதா சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் நரசிம்மராவை நையாண்டியும் செய்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறது என்று சொன்னார். வாஜ்பாய் அவர்களை செயலற்ற பிரதமர் என்று கூறினார் ஜெயலலிதா. சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதற்காக மன்னிப்பும் கேட்டார் ஜெயலலிதா.

               பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பலகீலமான கால்களை படைத்தவர் என்று ஜெயலலிதா சொன்னார். வாஜ்பாய் அவர்களோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும். திமுகவும் மத்திய அரசும் இணக்கமாக இருப்பதாலே, நமக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது இதேபோல் ஏராளமானவற்றை நாம் சொல்ல முடியும். திமுக ஆட்சி தொடர்ந்து இருக்கும் மீது தமிழகம் வளர்ச்சி அடையும். அதிமுக வந்தால் வீழ்ச்சி அடையும்.

             தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியர். அவர் செய்கின்ற அத்துமீறல்கள் ஏராளம். டெல்லியில் இருக்கிற தேர்தல் கமிஷனுக்கும், இங்கே இருக்கிற சிலருக்கும் தொலைதொடர்பில் நேரடி தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை. நாங்கள் ஐந்து ஆண்டு காலம் பாமகவின் 18 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியாக இருந்தோம். 

            நாங்கள் பேசியது, கருத்துக்களை தெரிவித்ததில் 100ல் ஒரு பங்கு கூட அதிமுக செய்யவில்லை. அதேமாதிரி நடிகர் கட்சி. சட்டசபையில் குடித்துவிட்டு வருவதாக ஜெயலலிதா சொன்னார். அதற்கு அவர்கள் பரிமாற்றிக்கொண்ட வார்த்தைகளை இங்கே சொல்லுவது நாகரீகமாகாது. அதனாலே சொல்லுகின்றோம். தப்பி தவறி என்று நான் சொல்லமாட்டேன். அவர் வரப்போவதில்லை. ஆனால் சில ஊடகங்கள், வேண்டுமென்றே சில பரப்புரைகளை செய்து வருகிறார்கள்.

             தமிழக மக்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்க தவறினால் தமிழகம் இருண்ட தமிழகமாக மாறிவிடும் என்பது தமிழக மக்களுக்கே தெரியும். தமிழக வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் அவர்கள் 6வது முறையாக முதல் அமைச்சராக வரவேண்டும் என்றார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும்: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்


 











தர்மபுரி:

               பா.ம.க.,வை விமர்சனம் செய்ய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
 
               தர்மபுரியில் நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., செந்தில் தலைமை வகித்தார். 

தர்மபுரியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

                தமிழகத்தில் கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப்பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். என் மீது அவதூறாக ஏதேதோ பேசுகிறார். இதுநாள் வரை அவருக்கு நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். அந்த நடிகர் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அவர் என்னை பற்றி பேசுவதா? கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்தார். அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது அந்த நடிகர் ஜெயலலிதா பற்றி கடுமையாக விமர்சித்தார். 

                 நம்பக தன்மை இல்லாதவர் என்று கூறினார். இன்னும் ஏதேதோ கூறினார். தைரியம் இருந்தால் தனியாக போட்டி போடுங்கள் என்று கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கேட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை. எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறுகிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது அடக்குமுறை ஏவிய ஜெயலலிதா குறித்து 2009 மார்ச் 28ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதை அ.தி.மு.க., தொண்டர்கள் மறக்கக் கூடாது. தன் கையெழுத்து இல்லையென கூறிய ஜெயலலிதாவிடம் நாட்டை ஒரு போதும் மக்கள் ஒப்படைக்கக் கூடாது என, பேசிய விஜயகாந்த், மக்களை ஏமாற்றும் வகையில் இது நாள் வரை யாருடனும் கூட்டணி இல்லையென கூறிவிட்டு, தற்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பல இடங்களில் தே.மு.தி.க., கட்சியைப் பற்றி நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், விஜயகாந்த், பா.ம.க.,வை பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.

                 அரசியலின் அரிச்சுவடி தெரியாத விஜயகாந்த், பா.ம.க., பற்றி விமர்சனம் செய்ய தகுதியில்லை. கேட்டு பெறும் இடத்தில் பா.ம.க., உள்ளது; கொடுக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளதால், பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய சட்டசபை தொகுதிகளை அமைதியாக வாங்கிக் கொண்டது. தனித்து நின்று தன் பலத்தைக் காட்டிய பென்னாகரம் தொகுதியை தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனுக்கு விட்டுக் கொடுத்ததை தி.மு.க.,வினர் நினைத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.