நிர்வாகிகள் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிர்வாகிகள் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மதுராந்தகம் ஒன்றிய பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்: ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்

மதுராந்தகம் : 

          அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது. 

            மதுராந்தகம் ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம், மதுராந்தகத்தில் நடந்தது. ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலர் கங்காதரன், மாவட்டச் செயலர் குமரவேல், மாவட்ட தலைவர் கோபாலகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் 

        புதிய தலைமைச் செயலகத்தை, சிறப்பு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்ட, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

         படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, நிரந்தரத் தொழிலாளர் நியமிக்க வேண்டும்,

        விவசாயிகளுக்கு விதைக் கரும்புகள் வழங்க வேண்டும்,

     தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில், விவசாயத்திற்குத் தேவையான உரங்களை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்,

           அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,

            நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை வாங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: 

        எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

          திருமுல்லை வாயலை அடுத்த சோழம்பேடு பகுதியில் ஆவடி மற்றும் மதுரவாயல் தொகுதி பா.ம.க. கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதது:

            வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடாது. கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதே போன்ற கூட்டணி அமையும். கூட்டணி பற்றி இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடுகிறேன். எந்தக் கூட்டணி என்றாலும் பா.ம.க.விற்கு மொத்தம் 45 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கோருவோம். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 3 தொகுதிகளையாவது பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி கோருவோம்.

பிளான் முக்கியம்...

              சட்டசபை தேர்தலையொட்டி இப்போதிருந்தே மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் மைக்ரோ பிளானிங் எனப்படும் நுண் திட்டமிடல் முறையை பின்பற்றி 2-வது இடத்தை பிடித்தோம். அதே போல் வரும் தேர்தலிலும் திட்டமிட்டு நாம் பணியாற்ற வேண்டும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பா.ம.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகம் உள்ளன.

திண்ணைப் பிரச்சாரம்....

           பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். ஆவடி தொகுதிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சிவகோவிந்த ராசும், மதுரவாயல் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் கே.என்.சேகரும் தலைமை தேர்தல் பணிக்குழு அமைப்பாளர்களாக அமர்த்தப்படுகின்றனர். தேர்தலில் நாம் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றாலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். 

          பிரசாரத்தின்போது கூட்டணி கட்சிகளின் கொள்கைகளையும், நமது கட்சி கொள்கைகளையும் சேர்த்து பிரசாரம் செய்யவேண்டும். பிப்ரவரி மாதத்திற்குள் தொகுதி மாநாடுகளை நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்.", என்றார்.

பா.ம.க. கூட்டணிதான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் : ராமதாஸ்

மயிலம்:

         பா.ம.க., இன்றைக்கு இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிகமாக நம்பியுள்ளது என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசினார். மயிலம் சட்டசபை தொகுதி பா.ம.க., கிளை நிர்வாகிகள் கூட்டம் ரெட்டணை கிராமத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பேசியது 

            பா.ம.க., இன்றைக்கு இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிகமாக நம்பியுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடந்து வருகிறது. மயிலம் சட்டசபை தொகுதியில் பா.ம.க.,விற்கு 269 கிளைகள் உள்ளது. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும். நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். இது வரையில் வன்னியர்கள் முதல்வர்களாக வர முடியவில்லை.

              வரும் சட்டசபை தேர்தலில் மாற்றுக் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  தினமும் நிர்வாகிகள் ஒன்றுகூடி அரசியல் நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், கிராமத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., ஆதரவில்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.

                    வரும் பொங்கலுக்குப் பிறகு தான் பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். பா.ம.க., உள்ள கூட்டணி தான் அதிக இடங்களை வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.