நிழல் நிதிநிலை அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிழல் நிதிநிலை அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க. சார்பில் விவசாயிகளுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/826daa00-4c2a-420a-9da2-233d51a6ec61_S_secvpf.gif


பா.ம.க. சார்பில் விவசாயிகளுக்கானநிழல் நிதிநிலை அறிக்கை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். 

அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது

            தொடர்ந்து 4 வது ஆண்டாக விவசாயிகளுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை பா.ம.க. வெளியிட்டுள்ளது. இந்த வருடம் மத்திய அரசு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வெளியிடும் என்று நம்புகிறோம். அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழு அமைப்பது போல, விவசாயிகளுக்கு உழவர் ஊதிய குழு அமைக்க வேண்டும்.

            ஆண்டுதோறும் விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க ஆயிரம் கோடி ரூபாய் சுழல் நிதியம் ஏற்படுத்த வேண்டும். விவசாய வளர்ச்சிக்கு சிறிய ரக எந்திரங்களை வழங்க வேண்டும்.

           மதிய உணவில் வாழைப்பழத்துடன் நெல்லிக்காய் மற்றும் கீரை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசியல் சார்பில்லாத நலவாரியம் அமைத்து எல்லாவிதமான உதவிகளையும் செய்ய வேண்டும். திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், சேலம் ஆகிய மாநகர பகுதிகளில் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு உலகத்தரம் வாய்ந்த வணிக சந்தை உருவாக்க வேண்டும்.

           விவசாயிகளுக்கு மோட்டார்களை இயக்க இலவச டீசல் வழங்க வேண்டும். பகலில் 6 மணி நேரம் தடை இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும். முதல்கட்டமாக தாமிரபரணி, வைப்பாறு ஆகியவற்றையும், பின்னர் காவிரி, பாலாறு ஆகிய நதிகளையும் இணைக்க வேண்டும் என்றார்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டியில்

கேள்வி: சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட்டில் தாக்கல் ஆகி உள்ள நிபுணர் குழு அறிக்கை தள்ளுபடி ஆகுமா?

பதில்: தள்ளுபடி செய்யப்படும் என்று நம்புகிறோம். சி.பி.எஸ்.சி. தரத்திலான கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் போராடி வருகிறோம். 

கேள்வி: கடந்த தேர்தலில் பணம் கொடுத்தும் பயன் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

பதில்: மக்கள் எல்லோரிமும் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் விரும்பியவர்களுக்குத்தான் வாக்களித்தார்கள். ஊழல் கட்சிகள் பூத் செலவுக்கு பணம் கொடுப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. எங்களை போன்ற சிறிய கட்சிகளிலும் அந்தநோய் தொற்றிக் கொண்டு விட்டது. அதில் இருந்து மீள முடியவில்லை. இனி நாங்கள் “பூத்” செலவுக்கு பணம் கொடுக்க மாட்டோம். இதுபோல் எல்லா கட்சிகளும் முடிவு செய்ய வேண்டும். 

கேள்வி: சிறுவன் தில்சான் சுட்டுக் கொல்லப்பட்டதில் இதுவரை கைது இல்லையே?

பதில்: ராணுவ ஒத்துழைப்பு இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்குள் கைது செய்திருக்க வேண்டும்.

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சி பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: அதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆக வேண்டும் என்றார்.

பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்



 
சென்னை:
 
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு முன்பு பா.ம.க. சார்பில் மாதிரி பட்ஜெட் வெளியிடப்படுகிறது.  
 
இந்த ஆண்டுக்கான பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு கூறியது 
 
           கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் எத்தனை? அதில் நிறைவேற்றப்பட்டவை எத்தனை என்ற விவரங்களை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போதைய நிதிநிலை குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவு பயன் அளித்துள்ளது என்பதையும் அறிக்கையாக வெளியிட வேண்டும். மாநில அரசு இட ஒதுக்கீடு கொள்கையை வரையறுக்க மத்திய அரசை வற்புறுத்தவேண்டும்.  
 
            அனைத்து குழந்தைகளுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி விட்டு இந்த ஆண்டே 1 முதல் 12-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழு அமைக்கவேண்டும். தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். மின்தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தியில் மக்களை ஈடுபட செய்ய வேண்டும்.
 
            காற்றாலை, சர்க்கரை ஆலை மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து மின் உற்பத்தி செய்யும் முறைக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இளைஞர்கள் பாதை மாறி செல்வதற்கு குடிப்பழக்கமும், சினிமாவும்தான் காரணம். குறைந்தது 5 ஆண்டுகள் இந்த இரண்டையும் தடை செய்து விட்டால் இளைஞர்களை திருத்த முடியும். முதல் கட்டமாக மது விற்பனையை பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் நடத்தவேண்டும். சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் மதுக்கடைகளை மூடவேண்டும்.
 
             சென்னை மற்றும் நகர பகுதிகளில் பொது இடங்களிலும், கல்வி நிறுவன பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.   ங்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு ஆண்டின் மொத்த வருமானம் 81 ஆயிரத்து 635 கோடி ரூபாய். செலவு 81 ஆயிரத்து 125 கோடி. ரூ.510 கோடி மீதம் வரும். சென்ற ஆண்டின் பற்றாக்குறைக்கு சம்பள உயர்வுதான் காரணம்.  
 
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினையில் அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
 
பதில்:- இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.
 
கே:- உங்கள் மாதிரி “பட்ஜெட்”டை முதல்-அமைச்சரிடம் கொடுப்பீர்களா?
 
ப:- அதற்கான வாய்ப்பு இல்லை. வீட்டு வாசலிலாவது கொடுத்து விடுவோம்.
 
கே:- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?
 
ப:- தனிப்பட்ட முறையில் நான் இதற்கு உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது. கட்சியின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடிதான் முடிவு செய்யும்.
 
கே:- உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கூட்டணி பற்றி முடிவு செய்து விடுவீர்களா?
 
ப:- உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு செய்து விடுவோம்.
 
கே:- ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய மந்திரி தயாநிதிமாறனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறதே?
 
ப:- சட்டம் அதன் கடமையை செய்யும்.  
 
கே:- லோக்பால் சட்ட மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து உங்கள் கருத்து?
 
ப:- பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் உட்படுத்த வேண்டும்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
 
           நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, ஜெயராமன், முத்துக்குமார், சைதை சிவா, வி.ஜே. பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.