திண்டுக்கல்லில் பாமக மாவட்ட மாநாடு நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் இதில் பங்கேற்றார்.
மாநாட்டிற்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது :
‘’பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் தென் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் போட்டியிடும்’’ என்று தெரிவித்தார். ‘’ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாமக மவுனமாக இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் இருந்தது பாமக. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாடு என்னவென்றால் கூட்டுக்குழு விசாரணை என்பது தேவையில்லை. சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கவனித்து வந்தாலே போதுமானது’’ என்று தெரிவித்தார்.