மேட்டுப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேட்டுப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலங்கை கடற்படையை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளைம்:

         இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

               இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது, அடிக்கடி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு ஜெயக்குமார், பாண்டியன் என இரண்டு தமிழக மீனவர்கள் உயிரிழந்தனர்.

             இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை கண்டித்து கோவை மாவட்ட பாமக சார்பில் மேட்டுபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க இந்த பிரச்சனையை உலக அளவில் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.