திண்டிவனம்:
திண்டிவனத்தை அடுத்த எண்டியூர் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வன்னியர் சங்க பொறுப்பாளர் நல்லி.குலோத்துஙகன் தலைமையில் நடைபெற்றது.
பாமக முன்னாள் ஒன்றியச் செயலர் த.இராமலிங்கம், கிளை செயலர் பரசுராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஆ.மா.ஜானகிராமன் வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தில், பாமக மாநில இணை பொதுச் செயலரும் பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான டி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலரும் மேல்மலையனூர் எம்எல்ஏவுமான பா.செந்தமிழ்ச்செல்வன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அ.தருமன், பாமக மாநில துணைத் தலைவர் என்.எம்.கருணாநிதி உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர்.
பாமக மாவட்டச் செயலர் எஸ்.இ.ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் நா.சிவக்குமார், நகரச் செயலர் மலர்சேகர், மரக்காணம் மேற்கு ஒன்றியச் செயலர் பா.நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஊராட்சி மன்ற உறுப்பினர் டி.எத்திராஜ் நன்றி கூறினார்.