வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்

                கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.சித்திரை முழுநிலவு நாளையொட்டி வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் புதன்கிழமை இளைஞர் பெருவிழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்று ராமதாஸ் பேசியது: 

                இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் என அறிவித்த அரசு வன்னியர்களுக்கு 8 சதவீதம் மட்டும் வழங்குகிறது.தமிழ்நாட்டில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களின் ஜனத்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜூலை 18-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா நடத்தப்படும்.கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு ஜூலை 28-ந் தேதி ஒன்றிய, நகர, வட்டார, மாவட்ட அலுவலகங்கள் முன் தமிழகம் முழுவதிலும் அறவழியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்படும். போராட்டத்துக்கு முன்னர் வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து என்னுடைய தலைமையிலான குழு முதல்வரை சந்திக்க உள்ளது என்றார்.

0 கருத்துகள்: