சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான முடிவை அமைச்சரவை மிக விரைவில் மேற்கொள்ளும் என்று பிரதமர் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அறிவிப்பு நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாமக கருத்தரங்குகளை நடத்தியது. உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் பாமக சார்பில் வழக்குத் தொடர்ந்து இந்தக் கோரிக்கைக்கு சாதகமான தீர்ப்பை பெற்றோம். நாட்டின் ஜனநாயகமும் எதிர்காலமும் காக்கப்பட வேண்டுமென்றால் அனைத்து இடங்களிலும் அனைத்து சமூகங்களிலும் அவரவர் விகிதாச்சார அளவின்படி, உரிய பிரதிநிதித்துவம் பெறவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் மக்கள் தொகைக்கேற்ப சமூகங்கள் விகிதாச்சார பங்கு பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.
மத்திய அரசு இப்போது நல்ல முடிவை அறிவித்துள்ளது. நடைபெற்றுவரும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு காலதாமதமின்றி ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

0 கருத்துகள்:
கருத்துரையிடுக