நிர்ணயித்த கல்வி கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மெமோரியல் ஹால் முன்
கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தினார்.
பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பாமக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
பள்ளிகளின் கட்டண விகிதத்தை நீதிபதி கோவிந்தராஜன் குழு ஏற்கெனவே நிர்ணயித்துள்ளது. ஆனால், அரசு உத்தரவுகளையும், நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தையும் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் புறக்கணித்து வருகின்றன. பல மடங்கு கூடுதலாக பெற்றோர்களிடம் பணம் வசூலித்து வருகின்றன. இது, தொடர்நதால், மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த கல்வி சட்டத்தையும், அடிப்படை உரிமை சட்டத்தையும் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்படும். ஆனால், அரசு சார்பாக இந்தப் பள்ளிக் கூடங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு சில பள்ளிக்கூடங்கள் மீது வந்துள்ள புகாரையடுத்து, இதுகுறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது ஏற்புடையது அல்ல. அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள் மீது பெற்றோர், மாணவர்களிடம் புகார் பெறாமலேயே அரசே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பொறியியல், மருத்துவம் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இ தைத் தடுக்க மாவட்ட அளவில் கல்வித் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ள குழுக்களை அமைத்து, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஏற்கெனவே வசூலித்த கூடுதல் கட்டணத்தை பெற்றோர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக