மதுரையில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் செந்தில்வேல் தேவர் பேசுகையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களுக்கான அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் பல பள்ளிகளில் இந்த கட்டண விதிமுறைகளை நிர்வாகங்கள் கடைப்பிடிப்பதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு இதுகுறித்து ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு மதுரை புறநகர் மாவட்டச் செயலர் கிட்டு, மாநகர் மாவட்டச் செயலர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக