தருமபுரி:
வன்னியர்களின் ஒற்றுமையைக் குலைக்க திமுக, அதிமுக கட்சிகள் முயற்சித்து வருகின்றன என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு குற்றம் சாட்டினார்.
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஜூலை 28-ம் தேதி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விளக்கப் பொதுக்கூட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு பேசியது:
வன்னியர்களின் ஒற்றுமையுணர்வை சீர்குலைக்கும் வகையில் திமுக, அதிமுக கட்சிகள் செயலாற்றிவருகின்றன. திமுக-வின் வளர்ச்சிக்கும், ஆட்சி பொறுப்புக்கும் வன்னியர்கள்தான் அதிகமாக பாடுபட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை கைதியாக இருப்பவர்கள் வன்னியர்கள். வாக்குகள் அளிப்பதற்காக மட்டுமே வன்னியர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னிய இனம் ஒன்றிணைந்தால் தமிழகத்தை வன்னியர்கள்தான் ஆட்சி செய்வார்கள்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்னியர்கள் 21 பேர் இறந்தனர். ஆனால், 107 சாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவற்றில் வன்னியர்களுக்கு 7 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் அதிக பெரும்பான்மையுள்ள வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தற்போது தமிழகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளவர்களின் சாதிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர். கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் தலைமை தாங்கினார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் அ. சரவணன், தருமபுரி எம்எல்ஏ இல. வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.பி. வெங்கடேசுவரன், மாவட்டச் செயலர் வணங்காமுடி, மாவட்டத் தலைவர் அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக