குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு: பாமக தீர்மானம்

               
                கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பன போன்ற தீர்மானங்களை பாமக நிறைவேற்றி்யுள்ளது. பாமகவின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

இதில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:

                            சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்கக் கோரி மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கோரி ஜூன் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, பள்ளியில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து ஜூன் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழகத்தில் மறைமுகமாக நடக்கும் லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: