சீர்காழி:
சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு சரஸ்வதி அம்மையார் தலைமையில் நடந்தது. மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, முன்னாள் மத்திய மந்திரிகள் மூர்த்தி, வேலு, எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
வன்னியர் என்றால் சத்திரியன் என அர்த்தம். வன்னிய மக்கள் உரிமைக்காக நாம் போராடுகிறோம். அதற்காக எத்தனை முறை சிறை செல்லவும் நான் தயார். எனவே திறந்த வெளி சிறை சாலை உருவாக்குங்கள்.
சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு பற்றி பேசினால் இங்கு எம்.எல்.ஏ. ஜாதி பற்றி பேசலாமா என கேட்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் தோற்கடித்து விட்டோம். வன்னிய சமூகம் ஒழிந்து விட்டதாக சிலர் தவறாக நினைக்கிறார்கள். பென்னாகரத்தில் பணம் கொடுக்காமல் தி.மு.க. நேர்மையாக தேர்தலை சந்தித்து இருந்தால் நாங்கள் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்போம். வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 28-ந்தேதி மிகபெரிய போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியதாவது:-
மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும். 1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா? எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்ககூடாது. வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் அது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக