100 தொகுதிகளில் இளைஞர்களுக்கு பயிற்சி: ஜி.கே.மணி பேட்டி

தருமபுரி:

            இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் திறனை மேம்படுத்த தமிழகத்தின் 100 தொகுதிகளில் பயிற்சி முகாம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.  

தருமபுரியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

               இன்றைய இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வு மேம்படும் வகையில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாமக-வின் 18 எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி-க்கள் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்னும் தன்னம்பிகையுடன் வாழ வேண்டும். விழிப்புணர்வுடன், விவேகத்துடன் இருக்கு வேண்டும். சமூக பொருளாதார கல்வியில் முன்னேற்றம் காணவேண்டும். 

                   நல்ல அரசியல் குறித்து முழுமையாக அறியவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.  பாமக எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் எம்பி-க்கள் அனைவரும் இத்தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று, பாமகவின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து விளக்குவர். மக்களின் உரிமைகள்  எடுத்துரைக்கப்படும். மக்களின் நீண்ட நாள் பிரச்னைகளை அறிந்து, அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.தருமபுரி மாவட்டத்தில் சின்னாறு பகுதிகள் தூர்வாரப்பட்டு, விளை நிலங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.   முன்னாள் எம்பி இரா.செந்தில், எம்எல்ஏ இளவழகன், பாமக மாவட்டச் செயலர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: