திண்டிவனம்:
திண்டிவனம் வன்னியர் அறக்கட்டளையின் பொறியியல் கல்லூரியை, தமிழக கவர்னர் பர்னாலா வரும் 20ம் தேதி துவக்கி வைக்கிறார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் வன்னியர் அறக்கட்டளை கல்வி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் புதிதாக சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துவக்கப்படுகிறது. வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். சரஸ்வதி ராமதாஸ், குத்துவிளக்கேற்றுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வரவேற்கிறார். தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, புதிய கல்லூரியை துவக்கி வைக்கிறார். காங்., எம்.பி., கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி., அன்பரசு, முன்னாள் அமைச்சர் பூவராகவன், முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். அறக்கட்டளை இயக்குனர் அரிநாராயணன் நன்றி கூறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக