ஆசிரியர்களுக்கான ஊதியம்: பாமக கோரிக்கை


         மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                    6வது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதனை கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நான் வலியுறுத்தினேன்.

                    அதற்கென அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கை வந்ததும் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைப் பேரணி நடத்தப்பட்டு அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

                 எனவே, 6வது  ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள இரு வேறுபட்ட ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்திட சமச்சீர் கல்வியை முழு அளவில்நடைமுறைப்படுத்த வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும்.

                  ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தை 20 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது போலவே மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பதவி உயர்வு, பணி மாறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் மாவட்ட அளவில் இருக்கும்போது மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் என்பது தேவையற்றது என்று கூறியுள்ளார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்: