ராஜபாளையம்:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் பாமகவின் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்க வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:
முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என பல பிரச்னைகள் தமிழகத்தில் உள்ளன. காவிரி பிரச்னை 1968-ல் துவங்கி இன்று வரை முடிவுக்கு வராமல் உள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. 10 பிரதமர்கள், தமிழகத்தைச் சேர்ந்த 5 முதல்வர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த 11 முதல்வர்களால் இப்பிரச்னை குறித்து 32 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு ஏற்படவில்லை. காவிரி பிரச்னைக்காக இதுவரை ரூ. 1,218 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது, இதில் வழக்கறிஞர் கட்டணத்திற்கு மட்டும் ரூ. 1,142 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக