புதுவை:
புதுவை மாநில பா.ம.க. தலைமை அலுவலகம் முதலியார்பேட்டை 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அலுவலகத்தை ராமதாஸ் திறந்து வைத்து பேசினார்.
‘’பாமக ஒரு வித்தியாசமான கட்சி. புதுவை மாநில மக்களின் முழு நம்பிக்கையை இன்று வரை நாம் பெறவில்லை. புதுவை மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி பீடத்தில் அமரவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. புதுவையில் வருகிற 2011-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
10 தொகுதியில் நாம் வெற்றி பெற்றால் நமது தலைமையில் தான் ஆட்சி அமையும். கொள்கை மாறாமல், அணி மாறாமல் ஆளுங்கட்சிக்கு துதிபாடாமல் புதுவையில் செயல்படும் ஒரே கட்சி பாமக தான். நமது பொறுப்பாளர்கள் அறிவு கூர்ந்தவர்கள். துணிவு மிக்கவர்கள். உழைப்பில் தான் கொஞ்சம் குறை உள்ளது. அதனை சரி செய்தால் ஆட்சி நம்மிடம் தான். கட்சியை இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்’’என்று தெரிவித்தார்.
‘’தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறோம். 2011-ல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது. என்றாலும் அதற்கடுத்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். ஆனால் 2011-ல் புதுவையில் பாமக ஆட்சி அமையும்’’என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக