இடைப்பாடி:
இடைப்பாடி பகுதி பா.ம.க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இடைப்பாடி பயணியர் விடுதி மாளிகையில் நடைபெற்றது. இதில் பா.ம.க மாநில தலைவர் ஜி. கே.. மணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் கட்சியின் கடந்த கால நிகழ்வுகளையும் எதிர் காலத்தில் கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விளக்கி கூறினார்.
கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பிறகு பா.ம.க மாநில தலைவர் ஜி.கே. மணி. கூறியது:
’’பா.ம.க வலுவான மேலும் வளர்ந்துவரும் ஒரு முக்கிய சக்தி என்பதை யாரும் மறுக்கமுடியாது. எதிர் வரும் காலங்களில் தமிழக அரசியல்களத்தில் பா.ம.கவின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். இதற்கு உதாரணமாக பெண்ணாகரம் இடைத் தேர்தலை கூறலாம். அதே போல் தற்போது நாட்டின் அதிகப்படியான இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சினிமா போன்றவற்றின் தாக்கத்தால் திசை மாறும் நிலையில் உள்ளனர்.
இதை உணர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களை ஒன்றிணைனத்து பயிற்சி முகாம் நடத்தி அதன் வாயிலாக அவர்களை சிறத்த மனித சக்தியாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.இதற்காக 100 தொகுதிகளில் பயிற்சி முகாம் நடத்த திட்ட மிட்டு முதற்கட்டமாக 60 தொகுதிகளில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வரும் 30-ந்தேதி இடைப்பாடி, ஜலங்கண்டாபுரம் பகுதிகளில் இப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம..க சரியான கூட்டணி முடிவை தேர்வு செய்யும். பா.ம.க வின் உயர்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக கூடி செயற்குழுவில் நல்ல முடிவு எடுக்கப்படும்’’என்று கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக