இளைஞர்கள் குறித்து நடிகர்கள் சிந்தித்திருப்பார்களா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

                ஒரு நாளாவது நடிகர்கள் தமிழக இளைஞர்கள் குறித்து சிந்தித்திருப்பார்களா என, அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
                 காஞ்சிபுரம் தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

                   விடுதலைப் பெற்று 63 ஆண்டுகள் ஆகியும் பிற்படுத்தப்பட்டோர் போதுமான வளர்ச்சி அடையவில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தர போராடிய ஒரே கட்சி பாமகதான். ஆனால் இதுவரை வன்னியர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ முதலமைச்சராக வரமுடியவில்லை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அனைவரும் படிக்க வேண்டும். அனைத்துப் படிப்புகளும் இலவசமாகவும், தரமாகவும் படிக்க வேண்டும். எந்த படிப்பு படிக்க வேண்டும் என்று ஒரு பிள்ளை நினைக்கிறானோ, அந்தப் படிப்பு முடியும்வரை ஒரு பைசா கூட செலவு செய்யாமல் படிக்க வைக்க திட்டங்கள் போட்டுள்ளோம். இதுவரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இதுபோன்ற திட்டங்கள் போடவில்லை. சமச்சீர் கல்விக்கு திட்டங்கள் நாங்கள் போட்டோம் என்றார். 


ஜனவரி 14க்கு பின்னர்தான் கூட்டணி குறித்து முடிவு

                ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிக்குப் பின்னர் தான் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியும் என்றார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,

                       பாமக வன்னியர் கட்சி. ஜாதிக் கட்சி என பத்திரிகைகள், ஊடங்கள், மாற்றுக் கட்சிக்காரர்கள் கொச்சை படுத்துக்கின்றன. பாமக சாதிக் கட்சி அல்ல. சாதிக்கக் கூடிய கட்சி பாமக. சமூக நீதிக்காக போராடக் கூடிய கட்சி பாமக. அனைத்துக் சமூக மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி பாமகதான். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாமக நிறுவனர்
ராமதாஸ் போல் பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது.  தற்போது உள்ள இளைஞர்கள் நடிகர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளாவது நடிகர்கள் தமிழக இளைஞர்கள் குறித்து சிந்தித்திருப்பார்களா என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்: