பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டம்: ராமதாஸ்

திருவள்ளூர்:

                வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தப்பின் பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திருவள்ளூரில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

           பல ஆண்டுகளுக்கு முன்னால் வன்னியர் சமுதாயத்தினர் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஒதுக்கீடு மூலம் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் மருத்துவத் துறையிலும், 15 ஆயிரம் பேர் பொறியியல் துறையிலும் சேர்ந்துள்ளனர்.

                  இந்த இட ஒதுக்கீடு பெறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த போராட்டங்களை இளைஞர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இப்போராட்டத்தில் இறந்த 21 மாணவர்களின் தியாகங்களையும் நினைவு கூற வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் பாமகவில் இணைகிறார்களோ அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தப்பின் பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். அதற்கு முழு அளவு ஆதரவு தர வேண்டும் என்றார்.

0 கருத்துகள்: