பாமகவை அழிக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

                 எழுச்சியுள்ள இளைஞர்கள் உள்ளவரை பாமகவை யாராலும் அழிக்க முடியாது என, அன்புமணி ராமதாஸ் கூறினார். திருவள்ளூரில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ்,

                  பாட்டாளி மக்கள் கட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதைப் பார்த்து மாற்றுக் கட்சியினர் பொறாமையிலும் கலக்கத்திலும் உள்ளனர். எங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால் மாற்றுக் கட்சியினர் நமது சமுதாயத்துக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை. நமக்காக போராடவே நமக்கு பதவிகள் வேண்டும்.

                 தற்போதுள்ள இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். சினிமா வாழ்க்கை அல்ல, அது ஒரு பொழுதுபோக்கு என உணர வேண்டும். ஆகையால் சினிமா நடிகர்களை விட்டுவிட்டு சமுதாயத்துக்காக போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை தோற்கடித்தனர். ஆனால் எழுச்சியுள்ள இளைஞர்கள் உள்ளவரை பாமகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

0 கருத்துகள்: