பெண் சிசு கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம்: ராமதாஸ்

எடப்பாடி:

            பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

            சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி முகாமில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

               பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம். வரதட்சணை கொடுமையையும், குடி பழக்கத்தையும் அறவே ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்.  பெண்ணை கட்டிக் கொடுக்கும்போது, பெண்ணுக்கு நகை போடுவீர்காள? வேறு என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது. இதுபோன்ற பண்பாடுகள் ஒழிய வேண்டும். அதே சமயத்தில் ஆண் பிள்ளையை பெற்றவர்கள், பெண்ணுக்கு எதுவும் செய்ய வேண்டாம். பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்ற சமுதாயம் வளர வேண்டும். இதுபோன்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

                 தமிழகத்தில் குடி பழக்கத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், அதனை அரசே ஊக்குவித்து வருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

0 கருத்துகள்: