பாமக தென் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் போட்டியிடும்: ராமதாஸ்

 திண்டுக்கல்:


          திண்டுக்கல்லில்  பாமக மாவட்ட மாநாடு நடைபெற்றது.   பாமக நிறுவனர் ராமதாஸ் இதில் பங்கேற்றார். 


மாநாட்டிற்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது :
            ‘’பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் தென் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் போட்டியிடும்’’ என்று தெரிவித்தார்.  ‘’ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாமக மவுனமாக இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் இருந்தது பாமக. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாடு என்னவென்றால் கூட்டுக்குழு விசாரணை என்பது தேவையில்லை.  சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கவனித்து வந்தாலே போதுமானது’’ என்று தெரிவித்தார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் விரும்பும் கட்சி பாமக தான். மது, புகை பிடித்தல் , சினிமா ஆபாசம்& பித்து கூடாது என்று போராடும் ஒரே கட்சி பாமக. இதனால் பெண்கள் விரும்புகிறார்கள். குடிப்பதால் இளைஞர்கள், குடும்ப தலைவன் இப்படி குடும்பமே கெட்டு போகிறது. இதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போகவும் தயாராக உள்ளனர். அரசு டாஸ்மாக்குக்கு பதிலாக ஆவின், பாவின், பழரசம், மளிகை பொருட்கள் விற்கலாம். பெண்களின் மகிழ்ச்சி தான் மாநிலத்தின் வளர்ச்சி.