பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழு: பாமக நிறுவனர் ராமதாஸ்

அரியலூர்:

        அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
 
             தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்டவர் தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது. சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பா.ம.க.,வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பா.ம.க., கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

              தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது.

             இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும். வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும், கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர் என்றார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் 2 .5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பல ஊர்களில் / ஒன்றியங்களில் வன்னியர்கள் இருந்தும் பாமக அறிமுகமும், தொடர்பும் இல்லாமல் இன்னும் உள்ளது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 20% வன்னியர்கள் பெரும்பாலான கிராமங்கள், ஒன்றியங்களில் வசிக்கின்றனர். எனவே வன்னியர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இடம் கண்டறிந்து பாமகவுக்கு ஆதரவு திரட்டனும். ஒரு வன்னியர் ஓட்டு கூட சிதற கூடாது. டாக்டர் அய்யா ஒருமுறை இந்த மாவட்டங்களில் வலம் வந்து ஆதரவு திரட்டனும்.. அவ்வாறு செய்தல் தமிழ்நாட்டில் பாமக 100 தொகுதிகளில் வெற்றி பெரும். திருச்சி , தஞ்சை , திருவாரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கணிசமாக வன்னியர்கள் உள்ளனர்.