ராமதாசின் திட்டங்களை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

திண்டிவனம்:
 
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:

           ‘’ இந்த ஆண்டு இளைஞர் 2009-ம் ஆண்டு நமக்கு சோதனை ஆண்டு, 2010-ம் ஆண்டு படிப்பினை ஆண்டு; பாடம் கற்பிக்கப்பட்ட ஆண்டு. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டோம். நம்மில் குறை இருந்தது. கட்சியில் பெரும்பாலானோர் தேர்தல் பணி செய்யவில்லை.

                இருப்பினும் தோல்வியை நல்லது என்றே கருதுகிறேன்.   அதனை பாடமாக கருதி 2010-ல் கடந்த 6 மாத கால மாக கட்சியில் நல்ல முன்னேற்றம் உள்ளது.  இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்தி கிடைத்தால் பா.ம.க. கட்சி 36 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. திட்டமிட்டு உழைத்தால் வெற்றி கிட்டுவது நிச்சயம். ராமதாசின் திட்டங்களை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செயல்படுத்த வேண்டும். 25 வயதுக்கு உட்பட்டவர்களை கிளை செயலாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.  

              ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் ஆண்கள், 300 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணி யாற்ற வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலின் மூலம் 2011-ம் ஆண்டு பா.ம.க.வின் வெற்றி ஆண்டாக மாற்ற வேண்டும். கூட்டணி குறித்து ராமதாஸ் நல்ல முடிவினை எடுப்பார்’’என்று தெரிவித்தார்.
 

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் விரும்பும் கட்சி பாமக தான். மது, புகை பிடித்தல் , சினிமா ஆபாசம்& பித்து கூடாது என்று போராடும் ஒரே கட்சி பாமக. இதனால் பெண்கள் விரும்புகிறார்கள். குடிப்பதால் இளைஞர்கள், குடும்ப தலைவன் இப்படி குடும்பமே கெட்டு போகிறது. இதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போகவும் தயாராக உள்ளனர். அரசு டாஸ்மாக்குக்கு பதிலாக ஆவின், பாவின், பழரசம், மளிகை பொருட்கள் விற்கலாம். பெண்களின் மகிழ்ச்சி தான் மாநிலத்தின் வளர்ச்சி.